பாஜக, திமுகவினர் மாற்றி மாற்றிப் பரப்பும் கழிவறை புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது ?

பரவிய செய்தி

பொள்ளாச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்கு அந்த கட்சி ஏற்பாடு செய்த நவீன கழிப்பறை.

ரெண்டு டாய்லெட்க்கே ட்ரெண்ட் செஞ்சிங்களே, வருங்கால திட்டத்தை பாருங்க; திராவிட டாய்லெட் திட்டம்…!! Leaked News

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த 11ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் பகுதியில், புதிய சிப்காட் தொழிற்பூங்காவில் திட்ட அலுவலகத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில், ஒரே நேரத்தில், ஒரே அறையில்  இரண்டு பேர் பயன்படுத்தக் கூடிய வகையில் கழிவறை கட்டப்பட்டு இருப்பதாக பாஜக கட்சியினர் பலர் அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரல் செய்தனர். 

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக திமுக-வின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் டி.ஆர்.பி.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், கழிவறையின் கட்டிடப் பணிகள் முடிவதற்கு முன்பாகவே அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் பரப்பிவிட்டனர். தற்போது அதன் இறுதி பணிகள் முடிந்து விட்டது என பணிகள் முடிந்த கழிவறையின் புகைப்படங்களைப் பதிவிட்டு இருந்தார்.

அதில், கழிவறையில் டிவைடர் பொருந்தும் காட்சி இடம்பெற்று இருந்தது. அந்த பணி முடிந்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் திமுகவினரால் பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வரிசையாகப் பலர் பயன்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட கழிவறை புகைப்படம் ஒன்றினை பாஜக மற்றும் திமுக கட்சியினர் மாற்றி மாற்றிப் பரப்பி வருகின்றனர். 

இந்த புகைப்படத்தினை பாஜக சிந்தனையாளர் பிரிவு செயலாளர் கணியம்பூண்டி செந்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் வருங்கால திராவிட டாய்லெட் திட்டம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive

அதே கழிவறை புகைப்படத்தினை பொள்ளாச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்கு அக்கட்சி ஏற்பாடு செய்த நவீன கழிப்பறை என கோஸ்ட் (Ghost) என்ற நபர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இதனை திமுக-வினரும் பாஜக மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறை எனப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

பாஜக மற்றும் திமுகவினர் பரப்பக்கூடிய புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்த போது 2019 அக்டோபர் 22ம் தேதி EHA MEDYA எனும் ட்விட்டர் பக்கத்தில் எமன் நாட்டு தொடர்பான செய்தியில் இப்புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 

Twitter link

மேற்கொண்டு தேடிய போது,  மௌலான தாரிக் ஜமீல் சாஹேப் (Maulana Tariq Jameel Sahab D.B.) என்பவர் 2018 ஜனவரி 19ம் தேதியன்று தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

Facebook link 

அப்பதிவில், 2018ம் ஆண்டு, பிப்ரவரி 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடைபெற இருக்கும் தப்லீகி இஜ்தேமா (Tablighi Ijtema) நிகழ்விற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டு உள்ளார். 

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அவுரங்காபாத்-புனே நெடுஞ்சாலையில் உள்ள லிம்பே ஜல்கான் என்ற கிராமத்தில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களின் தப்லீகி இஜ்தேமா நிகழ்வு நடைபெற்றது.

போலீஸ் தரப்பில் அளித்த தகவலின்படி அந்த நிகழ்வில் சுமார் 30 லட்சம் பேர் கலந்து கொண்டது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுக்காகத் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த கழிவறை.

மேலும், மௌலான தாரிக் ஜமீல் சாஹேப்பின் பதிவிலேயே வேறு  புகைப்படங்களில் வரிசையாக அமைந்துள்ள கழிவறையில் குறுக்கே டர்பாலின் (Tarpaulin) கொண்டு தனித் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. 

முடிவு :

நம், தேடலில், பாஜக மற்றும் திமுகவினர் பரப்பக் கூடிய கழிவறை தொடர்பான புகைப்படம் 2018 பிப்ரவரியில் நடைபெற்ற தப்லீகி இஜ்தேமா நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக கழிவறை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader