பிஜேபி ஆட்சியில் 2 லட்சம் கோடி எண்ணெய் ஒப்பந்த கடன் செலுத்தப்பட்டதா ?

பரவிய செய்தி

முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் விட்டு சென்ற 1.4 லட்சம் கோடி எண்ணெய் பத்திரம் கடனை வட்டியுடன் நரேந்திர மோடியின் பிஜேபி அரசு அடைத்து உள்ளது. இந்தியாவில் தொடர்ச்சியான பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு இதுவே காரணம்.

மதிப்பீடு

சுருக்கம்

தற்போதைய அரசின் ஆட்சிக் காலக்கட்டத்தில் 3500 கோடி மதிப்புடைய இரண்டு எண்ணெய் ஒப்பந்த பத்திரங்கள் மட்டுமே முடிவடைந்து உள்ளன. மற்றொன்று 2021-ல் தன் இறுதி காலத்தை எட்டும்.

விளக்கம்

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 90 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் குறைந்த காலத்தில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலையானது ஏறுமுகத்தை மட்டுமே சந்தித்தது. நாள்தோறும் உயரும் பெட்ரோல் விலை குறித்து எதிர் கட்சியான காங்கிரஸ், மத்திய அரசு பெட்ரோல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தன.

Advertisement

அதற்கு பதில் அளித்த பிஜேபி அரசு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சினர் விட்டு சென்ற 1.4 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் ஒப்பந்த பத்திரம் மற்றும் மானியம் தான் பெட்ரோல் மீதான வரிகளை குறைக்க முடியாத காரணம் என குறைக் கூறினர்.

செப்டம்பர் 10-ம் தேதி பிஜேபி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ 1.3 லட்சம் கோடி மதிப்பில் எண்ணெய் ஒப்பந்த பத்திரத்தின் திருப்பி செலுத்தாத தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தி உள்ளதாக பதிவிட்டனர் 

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதாப், “ முந்தைய காங்கிரஸ் அரசு எண்ணெய் ஒப்பந்தபத்திரம் கொள்முதலில் 1.4 லட்சம் கோடி வைத்து விட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, 70,000 கோடி வட்டியை தனியாக கட்டியுள்ளோம். எங்கள் பொறுப்பில் இருந்து மொத்தம் திருப்பி செலுத்திய தொகை 2 லட்சம் கோடி “ என்று தெரிவித்தார்.

எண்ணெய் ஒப்பந்த பத்திரம் :

எண்ணெய் ஒப்பந்த பத்திரங்கள் என்பது பொது நிறுவனங்களான எண்ணெய் சந்தை நிறுவனம், உணவு நிறுவனம் மற்றும் உர நிறுவனம் போன்றவற்றின் மானியத் தொகைக்கு பதிலாக இந்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு செக்யூரிட்டியே என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிக்கை தெரிவிக்கின்றன.

Advertisement

பிஜேபி ஆட்சியில் 1.4 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்பட்டதா ?

1.4 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் 2005 முதல் 2010 வரையில் வழங்கப்பட்டது. இதில், 3500 கோடி மதிப்புடைய இரண்டு ஒப்பந்த பத்திரங்கள் மட்டுமே தற்போதைய ஆட்சியில் முடிவடைந்துள்ளன. இதையடுத்து உள்ள ஒப்பந்த பத்திரம் 2021 அக்டோபரில் முடிவடைய உள்ளது.

2016-2017 ஆம் ஆண்டின் பட்ஜெட் ரிசிப்ட்டின் annexure 6E-ல், “ எண்ணெய் சந்தை நிறுவனங்களின் மானிய தொகைக்கு பதிலாக சிறப்பு செக்யூரிட்டி ஒன்றை வழங்கியது ”. இரண்டு பத்திரங்கள் மட்டுமே தற்போதைய ஆட்சியில் முடிவடைந்து உள்ளதை அவை வெளிப்படுத்துகிறது. அனைத்து சிறப்பு செக்யூரிட்டி தொகையான 1.3 லட்சம் கோடி 2014-15 முதல் 2018-2019 வரை ஒன்றாகவே உள்ளது, கூடுதல் செக்யூரிட்டி ஏதும் வழங்கவில்லை “.

Annexure-ல் பார்க்கையில் இரண்டு செக்யூரிட்டி மட்டுமே 2015-ல் முடிவடைந்து உள்ளது. அடுத்த வரும் பல செக்யூரிட்டி பத்திரங்கள் 2021-2026-ல் இடையே உள்ளன. 2017-2018-ன் Annexure-ல் கூட இதே விவரமே உள்ளது.

2014-2018 ஆம் ஆண்டில் பிஜேபி ஆட்சியில் எண்ணெய் ஒப்பந்த பத்திரம் மீதான வட்டியான 40, 226 கோடி செலுத்தப்பட்டு உள்ளதாக பியுஷ் கோயால் ஜூன் 2018- தெரிவித்து இருந்தார்.

தற்போதைய அரசு ஆட்சி வரையில் உள்ள மொத்த எண்ணெய் ஒப்பந்த பத்திரத்தின் மதிப்பு 1.3 லட்சம் கோடி. அதில் எந்த மாற்றமும் இல்லை. 2014-2018 ஆம் ஆண்டில் 40,500 கோடி வட்டித்தொகையைத் தான் செலுத்தி உள்ளனர். வெறும் 3,500 கோடி மட்டுமே திருப்பி செலுத்திய அசல் தொகை ..

ஆக, பிஜேபி ஆட்சியில் 2 லட்சம் கோடி திருப்பி செலுத்தியது என்பது தவறான தகவல். 40 முதல் 50 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோல், டீசலுடன் கலால் வரி, டீலர் கமிசன், வாட் வரி என மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளால் 90 ரூபாய் வரை ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க வேண்டிய சூழ்நிலை இந்தியாவில் உருவாகி விட்டது.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கலாம் என மத்திய அரசு 2017 ஆம் ஆண்டில் அறிவித்ததில் இருந்து பெட்ரோல் விலை பைசா கணக்கில் தினமும் உயருகிறது. தேர்தலை சந்திக்கும் நேரத்தில் இவற்றின் நிலை இறங்கு முகமாக இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button