This article is from Jul 11, 2018

தேசியக் கொடிக்கு மேலாக பறந்த பிஜேபி கொடி..!

பரவிய செய்தி

உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி பேரணியின் போது இந்திய தேசியக் கொடிக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பறக்க விட்டுள்ளனர். இந்த செயல் section 2.2 of the flag code of india, 2002-ஐ மீறுகிறது. ஆனால், இந்த அவமதிப்பு சம்பவம் தொடர்பாக யார் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.

மதிப்பீடு

விளக்கம்

2017-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் ராம்லீலா மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேரணிக்கு வருகை தருவதற்கு முன்பாக அங்கிருந்தகட்டிடத்தின் மேலே இருந்த தேசியக் கொடிக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பறக்க விட்டுள்ளனர். கட்சியின் ஆதரவாளர்கள் கட்டிடத்தின் மீது ஏறி, கொடியை பறக்க விட்டதை அங்கிருந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலரும் பார்த்துள்ளனர்.

தேசியக் கொடிக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறப்ப தைக் கண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி பிஜேபி கொடி உடனடியாக இறக்கப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பிஜேபி கொடி கீழே இறக்கப்பட்டுள்ளது.

flag code of India 2002, section 2.2(viii)-ன் படி, “ இந்திய தேசியக் கொடிக்கு மேலாக எந்தவொரு கொடியும் பறக்கக் கூடாது மற்றும் பக்கவாட்டிலும் உயரமாக கொடிகள் பறக்கக் கூடாது. அதேபோன்று தேசியக் கொடி பறக்கும் கொடிமரத்தில் தேசியக் கொடிக்கு மேலாக பூவோ, மாலையோ அல்லது சின்னமோ இருக்க கூடாது ” என கூறப்படுகிறது.

ஆனால், இந்த விதியினை மீறி பிஜேபி கட்சியின் கொடி தேசியக் கோடிக்கு மேலாக பறந்துள்ளது. கட்சி ஆதரவாளர்கள் செய்த செயலுக்கு போலீசார் எந்தவொரு எப்.ஐ.ஆர் பதிவும் செய்யவில்லை மற்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், தேசியக் கொடிக்கு மேலாக பிஜேபி கட்சிக் கொடி பறப்பதை கண்ட சிலர் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader