பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் மது விநியோகம்.. ஆனா குஜராத் தேர்தல் இல்லப்பா !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவினருக்கு மது விநியோகம் செய்யப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. திமுகவை சேர்ந்தவர்களும் இதனைத் தங்களது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

Twitter Link

உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ குறித்து ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்த்ததில் உத்திர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தனது அதிகராப்பூர்வ ட்விட்டர் கணக்கில் 2021 டிசம்பர் 20ம் தேதி தற்போது வைரலான வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது கிடைத்தது.

Twitter link 

அதில், உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்துப் பதிவிட்டிருந்தனர்.

மேலும், வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் 2022, ஜூலை 4ம் தேதி வைரலான வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், பாஜக கட்சி தெலங்கானவை கோவா போல் மாற்றியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

Twitter link 

உத்திர பிரதேச காங்கிரஸின் ட்விட்டர் பதிவை வைத்துப் பார்க்கையில் தற்போது வைரலான வீடியோவில் இருக்கும் நிகழ்வு 2021ம் ஆண்டே நடைபெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. எனவே, இந்த வீடியோ தற்போது குஜராத் தேர்தலில் எடுக்கப்பட்டது இல்லை என தெளிவாகிறது.

குஜராத் தேர்தலில் மது : 

குஜராத் மாநிலத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் மாவட்டத்தில் இருந்து தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்துக்குக் கடத்தப்பட இருந்த 21 லட்சம் மதிப்புமிக்க மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மிட் டே செய்தித்தளம் 2022 நவம்பர் 16ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மதுவிலக்கு உள்ள குஜராத்தில் போதையில் தள்ளாடிய பாஜகத் தலைவர்.. கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு !

மது விலக்கு உள்ள குஜராத் மாநிலத்தில் கடத்தல் சாராயம் மற்றும் கள்ள சாராயம் விற்பனை அதிகம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பாஜக தலைவர் ஒருவரே கட்சி நிகழ்ச்சியில் போதையில் தள்ளாடிய காட்சி வைரலானது. அதேபோல், குஜராத்தில் கள்ளச்சாராயம் குறித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில் பாஜக கட்சி கூட்டத்தில் மது விநியோகம் செய்யப்பட்டது உண்மை என்றாலும், அவை தற்போது தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டது எனக் கூறப்படுவது பொய் எனத் தெரிய வருகிறது.

Please complete the required fields.
Back to top button
loader