குஜராத்தில் பாஜக தலைவர் வீட்டில் ₹18 கோடி கைப்பற்றப்பட்டதாகப் பரவும் வதந்திகள் !

பரவிய செய்தி
மதிப்பு மிக்க குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் கைப்பற்றிய பணம் மூன்று நாட்களாக என்னப் படுகிறது இந்த இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சனம் அடிப்பது கொள்ளை பேசுவது நீதி நேர்மை..
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் பாஜக தலைவர் சிக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் ₹18 கோடி கறுப்புப்பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி வீடு முழுவதும் அடுக்கப்பட்டுள்ள பணக்கட்டுகள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் எண்ணப்படுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவப்படும் அப்பதிவுகளில் “மதிப்பு மிக்க குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் கைப்பற்றிய பணம் மூன்று நாட்களாக எண்ணப்படுகிறது. இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சணம், அடிப்பது கொள்ளை, பேசுவது நீதி நேர்மை.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பு மிக்க குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடைய
சூரத் குடோனில் கைப்பற்றிய
பணம்
மூன்று நாட்களாக எண்ணப் படுகிறது இந்த
இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சனம் அடிப்பது கொள்ளை
பேசுவது நீதி நேர்மை pic.twitter.com/0g8oVi3L27— #தமிழ்நாடு Stalin is more Dangerous than Karunanid (@Pugal0405gmail4) May 31, 2023
மதிப்பு மிக்க குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடைய
சூரத் குடோனில் கைப்பற்றிய
பணம்
மூன்று நாட்களாக என்னப் படுகிறது இந்த
இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சனம் அடிப்பது கொள்ளை
பேசுவது நீதி நேர்மை pic.twitter.com/3jXmQeUd1f— Mani Sekaran (@ManiSek32574261) May 28, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த பணம் குஜராத் பாஜக தலைவரான சிக்கர் அகர்வாலுடைய சூரத் குடோனில் கைப்பற்றப்பட்டது அல்ல என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
இது குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், இது E-Nuggets என்ற மொபைல் விளையாட்டு செயலிக்கு தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம் என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து CNN-News18 தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த 2022 செப்டம்பர் 11 அன்று “ED கொல்கத்தாவில் பெரும்சோதனை நடத்தி ₹18 கோடி பணத்தை மீட்டது | வைரல் வீடியோ” என்னும் தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் இந்த வீடியோவுடன் ஒத்துப்போவதை அறிய முடிகிறது.
இதே போன்று Hindustan Times 2022 செப்டம்பர் 11 அன்று இது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மொபைல் விளையாட்டு செயலிக்கு தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக கொல்கத்தாவில் ஆறு இடங்களில் சோதனை நடத்திய அமலாக்க இயக்குனரகம் (ED) சுமார் ₹ 18 கோடி மதிப்பிலான பணத்தை மீட்டுள்ளது. எட்டு பணநோட்டுகள் எண்ணும் இயந்திரங்களைக் (Cash Counting Machine) கொண்டு வங்கி அதிகாரிகள் மூலம் எண்ணியதில் இரவு 7:30 மணி வரை கைப்பற்றப்பட்ட தொகை ₹ 18 கோடியாக இருந்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ED has carried out search operations under PMLA, 2002 (on 10.09.2022) at 06 premises in Kolkata, in respect to an investigation relating to the Mobile Gaming Application. Cash amounting to Rs 17.32 Cr has been seized
— ED (@dir_ed) September 12, 2022
மேலும் படிக்க: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சேகர் அகர்வால் வீட்டில் நடந்த சோதனையில் மீட்கப்பட்ட பணமா?
இதற்கு முன்பும் இதே வீடியோவை ஆம் ஆத்மி தலைவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்டது என ஆங்கிலத்தில் தவறாகப் பரப்பினர். இது குறித்தும் ஆய்வு செய்து ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.