ஹெச்.ராஜாவை திருச்சி மனநல காப்பக வாகனத்தில் ஏற்றியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
மனநல காப்பகம், திருச்சி
மதிப்பீடு
விளக்கம்
பாஜக கட்சியின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா திருச்சியில் மனநல காப்பக வாகனத்தில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை திமுகவினர் சிலர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். அந்தப் புகைப்படத்தில் காவல்துறையினர் சிலர் அவரை சுற்றி பரபரப்பாக நிற்பதையும் காண முடிந்தது.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து ஹெச்.ராஜாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், கடந்த செப்டம்பர் 11 அன்று “இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டபோது” என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பரவி வரும் அதே புகைப்படத்தை அவர் பதிவு செய்து இருக்கிறார். ஆனால் அதில் திருச்சி மனநல காப்பகம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டபோது pic.twitter.com/iwXzKkMAUH
— H Raja (@HRajaBJP) September 11, 2023
இதன்மூலம் ஹெச்.ராஜாவின் உண்மையான புகைப்படத்தை சிலர் எடிட் செய்து தவறாக பரப்பியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும் படிக்க: இந்துக்கள் இந்தியை எதிர்க்கமாட்டார்கள் என எச்.ராஜா கூறியதாக வதந்தி !
இதற்கு முன்பும் ஹெச்.ராஜா குறித்து பரப்பப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் புகழ்ச்சி, மோடி, அமித்ஷா மதவெறியர்கள் என்று எச்.ராஜா கூறியதாகப் பரவும் வதந்திகள் !
மேலும் படிக்க: அண்ணாமலைக்கு கூட்டணியை முறிக்க யார் அதிகாரம் தந்தது என ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !
முடிவு:
நம் தேடலில், ஹெச்.ராஜாவை திருச்சி மனநல காப்பக வாகனத்தில் ஏற்றியதாகப் பரவி வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.