கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட் என ஹெச்.ராஜா கூறினாரா ?

பரவிய செய்தி

கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட். பசு மாடுகளை பாதுகாக்க எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்பது ஏமாற்றத்தை தருகிறது. கோசாலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசிடம் பணம் இல்லையென்றால் சொல்லுங்கள், தெருவில் இறங்கி பிச்சை எடுத்துத் தருகிறேன் – எச்.ராஜா (முன்னாள் பாஜக தேசிய செயலாளர்).

மதிப்பீடு

விளக்கம்

திமுக அரசின் பட்ஜெட் அறிக்கையில் பசு தொடர்பாக எந்த திட்டமும், நிதியும்  இல்லை என்பதால் அதை குப்பை பட்ஜெட் என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்ததாக நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

தமிழக பட்ஜெட் அறிக்கையில் பசுவிற்கு திட்டங்கள் இல்லை என ஹெச்.ராஜா கருத்து தெரிவிக்கவில்லை. பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது.

ஹெச்.ராஜா பற்றி பரவும் நியூஸ் கார்டு போலியானது என கதிர் நியூஸ் பக்கமும் மறுத்துள்ளது. நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையை வாசித்த வீடியோவை ஹெச்.ராஜா விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் படிக்க : தமிழக பட்ஜெட்டை வைகோ விமர்சித்ததாக பாஜகவினர் பரப்பும் போலிச் செய்தி !

முடிவு : 

நம் தேடலில், கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட் என ஹெச்.ராஜா தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்ததாக பரவும் செய்தி போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader