முஸ்லீம் பெண்களை கூட்டு வன்புணர்வு செய்யுமாறு பதிவிட்ட பாஜக அமைப்பின் தலைவி !

பரவிய செய்தி
ஹிந்து சகோதரர்கள் 10,20 ஒன்றுக்கூடி முஸ்லீம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என பிஜேபியின் மகிளா மோர்ச்சா தலைவர் சுனிதா சிங் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். ஒரு பெண்ணே மற்ற பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை செய்யுமாறு கூறுகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
உத்திரப்பிரதேசத்தின் ராம்கோலாவின் பாரதிய ஜனதா கட்சியின் ” மகிளா மோர்ச்சா ” அமைப்பின் தலைவர் சுனிதா சிங் கவுர் தன் சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்துள்ளார்.
அதில், ” அவர்களுக்கான(முஸ்லீம்கள்) ஒரே தீர்வு. இந்து சகோதரர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு கும்பலாக சென்று அவர்களின்(முஸ்லீம்கள்) தாய் மற்றும் சகோதரிகளை தெருவில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும். பின் மற்றவர்கள் பார்க்கும்படி பஜாரின் நடுவில் அவர்களை தூக்கிலிட வேண்டும் ” என கவுர் ஹிந்தி மொழியில் பதிவிட்டு இருந்தார்.
இந்தியாவை பாதுகாக்க விரும்பினால் ஹிந்து சகோதரர்கள் கும்பலாக முஸ்லீம் வீடுகளில் இருக்கும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யுமாறு கூறியுள்ளார். எனினும், அப்பதிவை சுனிதா தன் சமூக வலைதள பக்கத்தில் இருந்து உடனே நீக்கி உள்ளார். ஆனாலும், அந்த பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட்கள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஒரு பெண்ணாக இருந்து மற்ற பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய சொல்லி தூண்டுவது எத்தகைய கொடூரமான எண்ணம் எனக் கூறி சுனிதா மீது கண்டனங்கள் பாயத் தொடங்கின. டைம்ஸ் ஆஃப் இந்தியா க்ரூப்-ன் Ahmadabadmirror எடிட்டர் தீபல் திரிவேதி ஜூன் 28-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் சுனிதா உடைய பதிவின் புகைப்படத்தை பகிர்ந்து தன் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
Be assured, BJP Mahila Morcha will not tolerate any hateful comments whatsoever from any karyakarta. The lady in question has been expelled even before you tweeted. pic.twitter.com/r4xIx6AHGG
— Vijaya Rahatkar (@VijayaRahatkar) June 29, 2019
தீபல் திரிவேதி உடைய ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து இருந்த மகிளா மோர்ச்சாவின் தேசிய தலைவர் விஜயா ரஹத்கர், சுனிதா வகித்து வந்த பதவியில் இருந்து ஜூன் 27-ம் தேதி நீக்கப்பட்ட அறிவிப்பை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.
பிஜேபி கட்சியினை சேர்ந்தவர்கள் இவ்வாறு பதிவிடுவது முதல் முறையல்ல. சமூக வலைத்தளத்தில் மத சார்ந்த தகாத கருத்துக்களை பதிவிட்டே வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் ஒரே பெண்ணை மற்ற சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய சொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முதலில் யாரிடம் இருந்து இந்தியாவை காக்க வேண்டும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் !