This article is from Nov 25, 2019

பாஜக எம்.எல்.ஏ மானை வேட்டையாடுவதாக வைரலாகும் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி

சல்மான் கான் மான் வேட்டை ஆடினார் என்பதற்காக 7 வருடம் சிறை தண்டனை. இவனுக்கு என்ன தண்டனை. பிஜேபியை சேர்ந்த எம்.எல்.ஏ என்பதால் மன்னிப்பா ? பசு காவலர் என்ற போர்வையில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த கொலை வெறியர்களை நடமாட விட்டிருக்கும் மோடி ஆட்சி செய்யும் நாடு அல்லவா. நீதி என்பது ??

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

Gowdham Yaazh எனும் முகநூல் பக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் மானை வேட்டையாடுவதாகக் கூறி பதிவிட்டு இருந்த வீடியோ 16 ஆயிரம் ஷேர்களை கடந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.

Facebook link | archived link

இந்த முகநூல் பதிவின் லிங்கை அனுப்பி வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு  ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ மானை வேட்டையாடினாரா எனத் தேடிய பொழுது, மேற்கு வங்கத்தில் வனத்துறை அதிகாரி மானை வேட்டையாடியதாக இதே வீடியோ இந்திய அளவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அக்டோபர் மாதத்தில் வைரலாகி இருக்கிறது.


Twitter link | archived link

உண்மை என்ன ? 

Youtube link | archived link

மானை வேட்டையாடியதாக இந்திய அளவில் பல செய்திகளுடன் பரவிய வீடியோ குறித்து தேடுகையில், 2015-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி ” The daily star ” என்ற யூட்யூப் சேனலில் “Killing Deer ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.

ஆக, இந்த வீடியோ சமீபத்தியவை அல்ல என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், இந்த வீடியோ Moin Uddin என்ற முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக வீடியோவின் கீழே கூடுதல் தகவலாக குறிப்பிட்டு இருந்தனர்.

2015 ஜூலை 12-ம் தேதி பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ” The daily star ” எனும் செய்தி இணையதளத்தில் ” Who is the beast? ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் பங்களாதேஷ் நாட்டில் பிறந்த ஆஸ்திரேலியரான மொய்ன் உதின் தன்னுடைய சொந்த பண்ணையில் மான்களை வேட்டையாடி மகிழ்வதாக வெளியிட்ட வீடியோ குறித்து கடுமையாக கேள்வி எழுதி இருந்தன.

The daily star இணையதளத்தில் செய்திகள் வெளியானதற்கு மொய்ன் உதின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஜூலை 13-ம் தேதி பதிவிட்ட பதிவில், சிட்டங்காங் பகுதியில் உள்ள ” Hillsdale Multi Farm” எனும் தன்னுடைய சொந்த பண்ணையில் அனுமதி பெற்ற துப்பாக்கியின் மூலம் மானினை வேட்டையாடியதாகவும், அதற்கான ஆவணங்களை காண்பிப்பதாகவும் கூறி இருந்தார்.

Moin uddin post archived link 

முடிவு : 

நம்முடை தேடலில் இருந்து, பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ மானை வேட்டையாடியதாக வைரலாகி வரும் வீடியோ இந்தியாவை சேர்ந்தது அல்ல. 2015-ல் பங்களாதேஷ் நாட்டில் உள்ள தன் பண்ணையில் மொய்ன் உதின் என்பவர் மானினை சுட்டுக் கொன்ற வீடியோ என்பதை அறிந்து கொண்டு இருப்பீர்கள். தவறான வீடியோக்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader