எல்.முருகன் பசுவிற்கு உரிமைத் தொகை வழங்கச் சொன்னாரா ?

பரவிய செய்தி
குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை வழங்குவதிற்கு பதிலாக இந்துக்களின் தாயான பசுவிற்கு வழங்கத் தயாரா ?- ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி !
மதிப்பீடு
விளக்கம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக, இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை வழங்குவதிற்கு பதிலாக இந்துக்களின் தாயான பசுவிற்கு ஊக்கத் தொகை வழங்கத் தயாரா என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதாக நியூஸ் ஜெ சேனலின் நியூஸ் கார்டு மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
எல்.முருகன் இந்துக்களின் தாயான பசுவிற்கு உரிமைத் தொகை கேட்டதாக பரப்பப்படும் தகவல் பொய் செய்தியே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு செய்யாமல் இருப்போம் என ஸ்டாலின் உத்தரவாதம் அளிக்க முடியுமா என எல்.முருகன் கேள்வி எழுப்பியதாக வெளியான நியூஸ் கார்டில் பசுவை வைத்து எடிட் செய்து உள்ளனர்.
