பிராமணர்களுக்கு உரிய ஸ்தானம் போய்விட்டது என நாராயணன் ட்வீட் வெளியிட்டாரா ?

பரவிய செய்தி
60 ஆண்டுக்கால திராவிட சீர்கேடுகளால் பிராமணர்களுக்கு உரிய ஸ்தானம் பறிபோய் விட்டது. இதற்குதானே ஆசைப்பட்டீர்கள் இந்துக்களே – நாராயணன் திருப்பதி
மதிப்பீடு
விளக்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தின் தலைமை ஆதீனத்திற்கு கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள் மரியாதை நிமித்தமாக குனிந்து பிரசாதம் வழங்கும் புகைப்படம் யாருக்கும் யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை எனும் கருத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதையடுத்து, தமிழக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அப்புகைப்படத்தை பதிவிட்டு, ” 60 ஆண்டுக்கால திராவிட சீர்கேடுகளால் பிராமணர்களுக்கு உரிய ஸ்தானம் பறிபோய் விட்டது. இதற்குதானே ஆசைப்பட்டீர்கள் இந்துக்களே ” என ட்வீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், தன்னுடைய ட்வீட் என வைரலாகும் புகைப்படத்தை போலியானது என நாராயணன் மறுத்து உள்ளார். போலியான பதிவால் தனக்கு விளம்பரம் கிடைப்பதாகக் கூறி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
சோலியில்லாத யாரோ ஒரு போலியின் பதிவால் எனக்கு விளம்பரம். pic.twitter.com/gYREAQSRI2
— Narayanan Thirupathy (@Narayanan3) December 22, 2020
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.