பாஜகவின் “நோதாஜி” விளம்பரம்.. எடிட் படத்தை பரப்பும் திமுக, அதிமுகவினர், வீடியோவே பதிவிட்ட விகடன் !

பரவிய செய்தி

எதே நோதாஜியா படிங்கடா…

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாடு பாஜக சார்பில் வரையப்பட்ட சுவர் ஓவியம் ஒன்றில், அண்ணாமலை படத்திற்கு அருகே ” தமிழகத்தின் நேதாஜி ” என்பதற்கு பதிலாக “நோதாஜி “ என எழுத்துப்பிழையுடன் எழுதி உள்ளதாக சுவர் ஓவியத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதிமுகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

பாஜகவின் இச்சுவர் ஓவிய படத்தை வைத்து விகடன் தரப்பில் டைம் பாஸ் கட்டுரையும், Imperfect show நிகழ்ச்சியில் வீடியோவாகவும் பேசி பதிவிட்டு உள்ளனர்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் பாஜக சுவர் ஓவியத்தின் படத்தை ஜூம் செய்து பார்த்தால் “நே”-க்கு அருகே துணைக்கால் எடிட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டு இருப்பது தெளிவாய் தெரிகிறது.

வைரல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடுகையில், துணை நடிகையும், விசிக ஆதரவாளருமான டாக்டர் ஷர்மிளா என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்ட பதிவில் எடிட் செய்யப்படாத புகைப்படம் பதிவாகி இருக்கிறது. அதில், தமிழகத்தின் நேதாஜி என்றே இடம்பெற்று இருக்கிறது.

Twitter link | Archive link 

மேற்கொண்டு தேடுகையில், தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் வெங்கடேசன் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில், ” “அண்ணாமலை படத்துடன் தமிழகத்தின் நேதாஜி ” என வரையப்பட்ட சுவர் ஓவியம் திண்டுக்கல்-மதுரை பைபாஸ் பகுதியில் வரையப்பட்டதாக வீடியோ ஒன்று பிப்ரவரி 3ம் தேதி பதிவிடப்பட்டு உள்ளது.

Twitter link | Archive link 

பாஜகவின் விளம்பரத்தை எடிட் செய்து பரப்புவது ஒருபுறம் இருக்க, ” நேதாஜியுடன் அண்ணாமலை போன்ற கட்சித் தலைவரை ஒப்பிடுவது நியாயமா ” என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மேலும் படிக்க : திமுக கட்சியினர் ‘காம வீரரே’ எனப் போஸ்டர் அடித்ததாக பரப்பப்படும் எடிட் செய்த போஸ்டர் !

இதற்கு முன்பாக, திமுக கட்சியினர் அடித்த போஸ்டரில் காம வீரரே என எழுதப்பட்டதாக எடிட் செய்யப்பட்ட படம் ஒன்று வைரல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு பாஜகவின் சார்பில் வரையப்பட்ட சுவர் ஓவியத்தில் அண்ணாமலை படத்தின் அருகே தமிழகத்தின் நோதாஜி என எழுதப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button