This article is from Apr 08, 2022

பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை குறைவா ?

பரவிய செய்தி

பாஜக ஆளூம் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு !

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகையில், ஆளும் பாஜக அரசின் ஆதரவாளர்கள் பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை குறிப்பிட்டு விவாதத்தில் இறங்கி உள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தில் மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பு குறித்து தந்தி டிவி வெளியிட்ட செய்தியில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விலை மற்றும் மற்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விலை ஒப்பிடப்பட்டுள்ளது.

இதை வைத்து பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு, பாஜக அல்லாத மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை உயர்வு என்பது போல் தந்தி டிவி நியூஸ் கார்டை பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ?

பெட்ரோல், டீசல் மீது ஒன்றிய வரி மற்றும் மாநில வாட் வரி விதிப்பு என அதிகப்படியான வரி விதிப்பு இருப்பதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்கிறது. எரிபொருள் மீதான வரி விதிப்பு குறித்து பல கட்டுரைகளை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.

அடுத்ததாக, பெட்ரோல், டீசல் விலை குறித்து தந்தி டிவி வெளியிட்ட செய்தி கடந்த மாதம் 24ம் தேதி வெளியானது. இரு வாரத்திற்கு முன்பு வெளியான செய்தியை தற்போது வரை பரப்பி வருகிறார்கள்.

அப்போது செய்தியில் பாஜக ஆளும் மாநிலங்களில், மத்தியப் பிரதேசம்- 108.98ரூ, கர்நாடகா- 102.26ரூ , பீகார் (கூட்டணி)- 107.53ரூ , மணிப்பூர் – 101.49ரூ, திரிபுரா – 100ரூ என அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டது குறித்து ஏன் விடுபட்டன எனத் தெரியவில்லை.

2022 ஏப்ரல் 8-ம் தேதி நிலவரப்படி, அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்து செல்கிறது.

அதுமட்டுமின்றி, எப்போதும் பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு எனக் கூறும் போது கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார் (கூட்டணி ஆட்சி) உள்ளிட்ட மாநிலங்களை பற்றிக் கூற மறந்து விடுகிறார்கள்.

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.66ரூ , மத்தியப் பிரதேசத்தில் 118.16ரூ, பீகார் 116.23 ரூபாயாக உள்ளது.

அதேபோல், பாஜக ஆளாத பஞ்சாப், டெல்லி உள்ளிட்டவையில் பெட்ரோல் விலை குறைவாக இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு என பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு 2 வாரங்களுக்கு முன்பு வெளியான செய்தி. தற்போது பெட்ரோல் விலை 100க்கு மேல் சென்றுள்ளது.

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களான கர்நாடகாவில் பெட்ரோல் விலை தமிழ்நாட்டிற்கு நிகராகவும், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரில் தமிழ்நாட்டை விட விலை அதிகமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader