Fact Check

பாஜகவை மக்கள் ஆதரிக்காததே 14 பேர் பலியாக காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன் என்ன கூறினார் ?

பரவிய செய்தி

பாஜகவை மக்கள் ஆதரிக்காததே 14 பேர் பலியாக காரணம் என்றுக் கூறிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இறந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்காமல் திமிர் பேச்சு.

மதிப்பீடு

விளக்கம்

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இறந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்காமல், மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்காததே 14 பேர் பலியாக காரணம் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறவில்லை. 1996 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை அமைவதற்கு எதிராக “ பாஜக நடத்திய போராட்டத்திற்கு “ மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று கூறினார். இதையே பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை என ஒன் இந்தியா தமிழ் ஆன்லைன் செய்தியில் வீடியோக்கு கீழே இடம்பெற்றிருக்கும். மேலும், வாசகர்களை கவர்வதற்கு இதுபோன்ற தலைப்புகளை வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.  ஆனால், அதை தவறாக திரித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதைத் தவிர வேறு என்ன எல்லாம் பேசினார் என்று பார்ப்போம்.

பொன். ராதாகிருஷ்ணன் பேசியவை :

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு மே 23-ம் தேதி அளித்த பேட்டியில், துப்பாக்கிச் சூடு நடந்தது எனக்கு தெரியாது. தற்போது தான் வெளிநாட்டில் இருந்து வருகிறேன். முழு விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

 

 1996 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து பின்பு கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் 4 நாட்கள் என மொத்தம் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அதற்கு பெருவாரியாக ஆதரவு கிடைக்கவில்லை.

இரு திராவிட அரசுகள் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தன. அன்று அனுமதி அளித்தது மத்திய காங்கிரஸ் அரசாங்கம். அதில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கு பெற்றது. மத்திய அரசை குறை சொல்லும் ப.சிதம்பரம் அனுமதி வழங்கிய போது எங்கு சென்றார்.

துப்பாக்கிச் சூட்டில் ஏறக்குறைய 10 பேர் இறந்திருப்பது துருதிஸ்டவசமானது, மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. முழு விவரங்கள் தெரியவில்லை. அரசாங்கம் உடனடியாக விசாரணை கமிசன் வைக்க வேண்டும். எந்த காரணத்திற்காக போராட்டம் நடைபெற்றது. முழு விசாரணை நடத்தி அதை சார்ந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு போராடுபவர்கள் எல்லாம் போலித்தனமான போராடுகிறார்கள். அன்றே ஸ்டெர்லைட் ஆலை அமைவதை தடுத்து இருந்தால் இன்று 10 பேர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்ப காலத்தில் போராடும் போதே என்ன என்ன பிரச்சனைகள் வரும் என எடுத்துக் கூறினோம். ஸ்டெர்லைட்க்கு எதிராக பாஜக போராடியது, நான் போராடினேன். ஆனால், மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. அன்றே பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து இருந்தால் இன்று 10 பேர் நிச்சயம் உயிரிழந்து இருக்கமாட்டார்கள்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது போலீஸ். தூத்துக்குடி விசயத்தில் தகுந்த ஆய்வு நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியில் இங்கு பரப்பப்படுவதை போல் சொல்லவில்லை. ஆனால், அர்த்தம் மாறி புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அவர் போராட்டத்தை போலியானவர்களின் போராட்டம் என்ற சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பேசியுள்ளார். இந்த சூழலில் தூத்துக்குடியின் அமைதியே முக்கியத்துவம் வாய்ந்தது தவிர எந்த தலைவர்கள் பற்றிய தவறான திரிப்புகளும், பிரச்சனைகளும் அல்ல.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button