ஸ்டாலின் சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
இந்தியாவின் கடனை அடைக்க ஸ்டாலினின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்; அவற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
மதிப்பீடு
விளக்கம்
பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவின் கடனை அடைக்க ஸ்டாலினின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக APB Nadu ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று பாஜகவினரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
சூப்பர மணியை தூக்கிட்டு சுத்தின.கொத்தடிமைகள்..
வரிசையில் வந்து வாங்கிட்டு
போங்கடா……கொம்மாலே…. https://t.co/MFVNEEAAnM— மணிகண்டன் முதலியார் ⛳⛳⛳🇮🇳 (@W667DAf8eiSdq8L) July 10, 2023
#டயாபர்_பாய்ஸ் என்னமோ சொல்லுகிறார் கேளுங்கடா
அவளவு சொத்து இருக்கா… pic.twitter.com/t5JdfI4m9d
— Gowri Sankar D (@GowriSankarD_) July 11, 2023
உண்மை என்ன ?
கடந்த ஜூலை 06 அன்று சுப்பிரமணியன் சுவாமி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி குறித்து ABP Nadu தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள அவர், பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பது குறித்தும், மோடி ஒவ்வொரு நாடாக பயணம் செய்வது குறித்தும் விமர்சித்து பேசியுள்ளார். ஆனால், ஸ்டாலின் சொத்துக்கள் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து APB Nadu ஊடகத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர்கள் இது குறித்து எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் தேடியதில், APB Nadu ஊடகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி பேசியது குறித்து கடந்த பிப்ரவரி 09 அன்று நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “அதானியின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்; அவற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதானியின் சொத்துகள் குறித்து அவர் கடந்த பிப்ரவரியில் பேசியதாக வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை, ஸ்டாலினின் சொத்துகள் குறித்து அவர் பேசியதாக எடிட் செய்து தற்போது சமூக ஊடகங்களில் பரப்பி வருகினறனர் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: தேர்தலில் வெற்றிப் பெறாத அண்ணாமலை அறிவுரை கூற வேண்டாம் என ஆளுநர் ரவி பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !
மேலும் படிக்க: தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைக்கக்கூடாது என அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்தி !
முடிவு:
நம் தேடலில், ஸ்டாலின் சொத்துகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியதாகப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.