பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 8 ஓட்டு மட்டுமே வாங்கியதாக வதந்தி !

பரவிய செய்தி

கோட்சேவுக்கு ஆதரவாக பேசிய பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன், சென்னை மாநகராட்சி 134வது வார்டில் வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்து படுதோல்வி !

மதிப்பீடு

விளக்கம்

சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டில் பாஜக சார்பில் உமா ஆனந்தன் போட்டியிடுவதாக தகவல் வெளியான பிறகு, ” நான் கோட்சே ஆதரவாளர் ” என சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

மேலும் படிக்க : “நான் கோட்சே ஆதரவாளர்” எனப் பேசிய உமா ஆனந்தனுக்கு பாஜகவில் சீட்டு.. வைரலாகும் அவரின் வீடியோக்கள் !

இன்று காலை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது 134-வது வார்டில் உமா ஆனந்தன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் தரப்பில் பகிரப்பட்டு வைரலாகி வந்தது.

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவும் தன் ட்விட்டர் பக்கத்தில், உமா ஆனந்தன் 8 வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்ததாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.

உண்மை என்ன ? 

சென்னை 134வது வார்டில் உமா ஆனந்தன் 8 வாக்குகளை மட்டுமே பெற்றதாக பரவும் செய்திகள் தவறானது, அவர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து இறுதியில் வெற்றியும் பெற்றுள்ளார்.

” சென்னை 134வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,635 வாக்குகளும், காங்கிரஸ் 3503 வாக்குகளையும், அதிமுக 2655 வாக்குகளையும் பெற்றுள்ளன. உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார் ” என தமிழக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link

தவறானத் தகவலைப் பகிர்ந்த பத்திரிக்கையாளர் நிரஞ்சன் குமார், உமா ஆனந்தன் வெற்றிப் பெற்றுள்ளார் என்கிற தகவலையும் ட்விட்டரில் பின்னர் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link  

முடிவு : 

நம் தேடலில், சென்னை மாநகராட்சி 134வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்ததாக பரவும் தகவல் தவறானது. அவர் வெற்றிப் பெற்றுள்ளார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button