This article is from May 08, 2018

சமூக வலைதளத்தில் இளம் பருவ சோனியா காந்தி என தவறான படங்கள் !

பரவிய செய்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நீச்சல் உடையில் இருக்கும் இளம் வயது படம் எனக் கூறி நடிகையின் படத்துடன் ஓர் பதிவை வெளியிட்டுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

ஹாலிவுட் நடிகை Ursula andress படங்களை எடுத்து சோனியா காந்தியின் படங்கள் என ட்விட்டரில் பகிர்ந்துள்ளது பிஜேபி கட்சி.

விளக்கம்

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பாஜகவினர் பக்கத்தில் மே 3, 2018 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் படம் மற்றும் நீச்சல் உடையில் இருக்கும் பெண் ஒருவரின் படத்துடன் இணைத்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் இளமைக் கால படங்கள் என்று இதை வெளியிட்டுள்ளனர்.

சோனியா காந்தியின் படம் என கூறி இருப்பது முற்றிலும் தவறாகும். ஹாலிவுட் நடிகையின் படத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் இளமைக்கால படம் எனத் தவறான செய்தியை பதிவிட்டுள்ளனர்.

ஹாலிவுட்டில் மிகவும் புகழ்மிக்க படமான ஜேம்ஸ் பாண்ட் 007 படத்தின் ஒரு பாகத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை Ursula andress என்பவரின் புகைப்படமே இது. ஜேம்ஸ் பாண்ட் 007 படத்தில் ஹீரோ உடன் Ursula andress நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தில் நடிகையை மட்டும் தனியாக பிரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்றுக் கூறி பகிரப்பட்டுள்ளது.

சோனியா காந்தியை தவறாக சித்தரித்து வெளியிட்டப்பட்ட ட்விட்டர் பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தாலும், உண்மை எதுவென்று அறியாத சில சமூக வலைத்தள வாசிகள் இதை உண்மை என நினைத்து பகிரவும் செய்கின்றனர்.

பார்ப்பதற்கு சோனியா காந்தி அவர்களின் தோற்றத்தில் இருக்கும் பெண் ஒருவரின் மற்றொரு கருப்பு வெள்ளை புகைப்படம் இந்திய சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. கருப்பு வெள்ளை புகைப்படம் என்பதால் இதை சோனியா காந்தி அவர்களின் இளமைக் கால புகைப்படம் என அனைவரும் நினைத்து வருகின்றனர்.

இருப்பினும், பலரும் நினைப்பது போன்று இதுவும் சோனியா காந்தியின் இளம் பருவ படமல்ல. கலர் படத்தை கருப்பு வெள்ளையாய் மாற்றி தவறான செய்தியை பகிர்கின்றனர்.

1996-ல் வெளியான Fear என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை Laura Jeanne Reese Witherspoon என்பவரின் புகைப்படத்தையே கருப்பு வெள்ளையாக மாற்றி சோனியா காந்தி அவர்களின் இளம் வயது படம் என தவறாகச் சித்தரித்துள்ளார்கள். இணையத்தில் வதந்திகளை பரப்ப, ஒருவரின் மீது தவறான எண்ணத்தைத் தூண்ட இது போன்ற தவறான செயலில் பலர் ஈடுபடுவதை தடுக்க முடியமா என்று தெரியவில்லை. எனினும், உண்மை எதுவென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader