கோமியம் குடிப்பதால் கருப்பு பூஞ்சை வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டதா ?

பரவிய செய்தி
கருப்பு பூஞ்சை : அரிதான தொற்றின் 9,000 வழக்குகளுடன் மாட்டு கோமியத்திற்கு தொடர்பு இருப்பதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – பிபிசி
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போதே கருப்பு பூஞ்சை பாதிப்பு தோன்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், கொரோனா பாதிப்பிற்கு மாட்டின் கோமியம், சாணத்தை பூசிக் கொள்ளும் மக்களின் புரிதல் இல்லாத செயல்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி இருக்கையில், இவ்விரண்டையும் ஒற்றுமைப்படுத்தி, ” மாட்டின் கோமியத்தால் கருப்பு பூஞ்சை வருவதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் ” என பிபிசி அங்கில கட்டுரை வெளியிட்டு உள்ளதாக ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
” Black fungus : Indian Scientist find link with cow urine 9,000 cases of rare infection ” எனும் தலைப்பில் பிபிசி கட்டுரை வெளியிட்டதாக எனத் தேடுகையில், அப்படி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் செய்தி எடிட் செய்யப்பட்டு இருப்பதை கவனிக்க முடிந்தது.
கருப்பு பூஞ்சை குறித்து பிபிசி வெளியிட்ட கட்டுரைகளை தேடுகையில், ” Black fungus: India reports nearly 9,000 cases of rare infection ” எனும் தலைப்பில் வெளியான கட்டுரை கிடைத்தது. இரண்டிலும் ” Soutik Biswas ” என்பவரின் பெயர் India correspondent என இருப்பதை காணலாம். அந்த கட்டுரையின் ஸ்க்ரீன்ஷார்டிலேயே எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : தமிழகத்தை நெருங்கிய கருப்பு பூஞ்சை.. மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்குமா தமிழக அரசு ?
முடிவு :
நம் தேடலில், கோமியம் குடிப்பதால் கருப்பு பூஞ்சை வருவதை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளதாக பரப்பப்படும் பிபிசி கட்டுரையின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.