துருக்கியில் கருப்பு ரோஜாக்களா ?

பரவிய செய்தி
துருக்கியில் இயற்கையாக வளரக்கூடிய கருப்பு ரோஜாக்கள் இருக்கின்றன .
மதிப்பீடு
சுருக்கம்
கருப்பு நிற ரோஜாக்கள் போட்டோஷாப் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது , இயற்கையாக அல்ல .
விளக்கம்
ரோஜாக்கள் வெள்ளை , சிகப்பு , மஞ்சள் என பல வண்ணங்களில் காணப்படுவது வழக்கம் . ஆனால் கருப்பு நிறத்தில் ரோஜாக்களை யாராவது பார்த்தது உண்டா என்று கேள்வி எழுந்தால் இல்லை என்று தான் கூறுவர் . இப்படி இருக்கையில் துருக்கியில் கருப்பு நிறத்தில் ரோஜாக்கள் இயற்கையாகவே வளருகின்றன என்று இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது .
துருக்கியில் கருப்பு ரோஜாக்கள் இருப்பது பற்றி பேசப்படும் செய்திகள் , போலியான அரசியலால் பேச வைக்கப்பட்டவை என்று நம்மில் எத்தனை பெயருக்கு தெரியும் . ஆம் , தென்கிழக்கு துருக்கியின் ஹல்பீடி கிராமத்தில் கருப்பு ரோஜாக்கள் இயற்கையாகவே வளருகின்றன என்று இணையங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன .
சிகப்பு ரோஜாக்களை கருப்பு நிறத்தில் மாற்றுவதற்கு நீங்கள் மிகப்பெரிய புகைப்பட கலைஞராகவோ , போட்டோஷாப் தெரிந்தவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை . இது போன்று எளிதாக போட்டோஷாபில் நிறங்களை மாற்றலாம் . வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் ஈர்ப்பதற்காக துருக்கியில் உள்ள ஹல்பீடி கிராமத்தில் கருப்பு ரோஜாக்கள் இயற்கையாக பூக்கின்றன என்று வதந்திகளை பரப்பி உள்ளனர் . ஹல்பீடி கிராமம் மிகப்பெரிய சுற்றுலா தளமாக இல்லையென்றாலும் , சிறிது நீரில் முழ்கியவாறு அமைந்துள்ள பழைய ரும்கேல் கோட்டையானது ஒரளவு சுற்றுலா பார்வையாளர்களை கவரக்கூடியது .
கருப்பு ரோஜாக்கள் என்று கூறுபவை கருஞ்சிவப்பு நிறத்தில் பூக்கக்கூடியவை. இவை இயற்கையானவை என்று கூறி செய்திகளையும், படங்களையும் வெளியிட்டனர். ஆனால், இவை அனைத்தும் இயற்கைக்கு மாறாக பூக்க வைக்கப்பட்டவை. இத்தகைய பூக்களின் படங்களை சிறிது மாற்றம் செய்து ஏமாற்றி வருகின்றனர்.
இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் இருந்து சன்லூர்பாவிற்கு இடைவிடாத விமான சேவை உள்ளது . அங்கிருந்து 100 மையில் தொலைவில் ஹல்பீடி அமைந்துள்ளது . ஆனால் ஹல்பீடிற்க்கு போக்குவரத்து வசதி இல்லை . வாடகை கார்கள் மூலமாக மட்டுமே செல்ல முடியும் . இத்தகைய காரணங்களை கருத்தில் கொண்டு ஓர் வதந்தியை பரப்பினால் சுற்றுலா பயணிகளை ஈர்க்கலாம் என்று எண்ணி இவ்வாறு செய்துள்ளனர் . இதை அறியாமல் பலர் இணையங்களில் கருப்பு ரோஜாவின் அழகைப் பாருங்கள் என்றெல்லாம் வர்ணிக்கத் தொடங்கியுள்ளனர் .