9600097000 எண்ணிற்கு “BLOOD” என்று SMS அனுப்பினால் உடனடியாக இரத்தம் கிடைக்குமா ?

பரவிய செய்தி

அவசர நிலையில் இரத்தம் தேவைபட்டால் 96000 97000 என்ற எண்ணிற்கு “ BLOOD ” என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினால் இரத்தம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக உங்களை தொடர்பு கொள்வார்கள். பயனுள்ள இச்செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இரத்தம் கிடைப்பதற்காக, சென்னை ஜீவன் இரத்த வங்கியும், ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனமும் இச்சேவையை சென்னையில் தொடங்கினர். ஆனால், இத்தகைய சேவை தற்போது பயன்பாட்டில் இல்லை.

விளக்கம்

2008 ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த “ ஜீவன் இரத்த வங்கி ” மற்றும் ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனமும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இரத்தம் கிடைப்பதற்காக ஓர் சேவையைத் தொடங்கினர். இச்சேவை இரத்த வங்கி மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடம் இரத்தம் இருப்பு பற்றிய தகவல்களைத் போன்களின் மூலம் தெரிந்துக் கொள்ள ஏதுவாக அமைந்தது.

Advertisement

அதற்கென பிரத்யேக எண்களை ஏர்டெல் நிறுவனம் வழங்கியது. இதற்கு “ ஏர்டெல் கேர் ஃபார் எவ்ரிவோன் ” என்ற எஸ்.எம்.எஸ் சேவையை அறிவித்தது. இதில், 96000 97000  என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் தேவையான தகவல்களைப் பெறலாம்.

 மேலும், 96000 97000  என்ற எண்ணிற்கு  < BLOOD GROUP + or – >  என்று டைப் செய்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் இரத்தம் பற்றிய தகவல்கள் உடனடியாக  உங்களுக்கு கிடைக்கும். மேலும், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இது டோல் ப்ரீ எண் என்றும் கூறியிருந்தனர். இதைத் தவிர, ஜீவன் இரத்த வங்கியை நேரடியாகத் தொடர்புக் கொள்ளவும் தொலைபேசி எங்களை வழங்கி இருந்தனர்.

இத்தகைய சேவையானது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், தற்போது இச்சேவை நடைமுறையில் இல்லை என்பதே உண்மை. ஆனால், இது தொடர்பான செய்திகள் குறுச்செய்தியின் மூலம் பரவி வருகின்றது.

எனினும், இது போன்று மக்களுக்கு உடனடியாக இரத்தம் கிடைப்பதற்கு பல அமைப்புகள் உதவி புரிந்து வருகின்றனர். அவர்களைத் தொடர்புக் கொண்டால் தேவையான இரத்தம் உடனடியாக கிடைக்க வாய்ப்புள்ளன.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button