This article is from Sep 01, 2021

மணமகன் வாயில் குட்கா, பளார் விட்ட மணமகள்.. வைரல் வீடியோ உண்மைதானா ?

பரவிய செய்தி

மணமேடையில் மணமகனை ஓங்கி அடித்த மணப்பெண். வாயில் குட்காவை வைத்திருந்ததால் மணப்பெண் ஆத்திரம் !

News link | Archive link  

மதிப்பீடு

விளக்கம்

திருமண சடங்கின் போது வாயில் குட்காவை வைத்திருந்த மணமகனை ஆத்திரத்துடன் மணப்பெண் அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகக் கூறி தமிழின் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் பலவும் இவ்வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்கிற விவரங்களை செய்தி நிறுவனங்கள் வெளியிடவில்லை, இணையத்தில் வைரலாகி வருகிறது என்கிற ஒன்றை தகவலை அடிப்படையாக வைத்தே செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஏப்ரல் 4-ம் தேதி chandan mishra எனும் யூடியூப் சேனலில் வெளியான 11 நிமிட திருமண நிகழ்ச்சி வீடியோவில் 7வது நிமிடத்தில் வைரலான காட்சி இடம்பெற்று இருக்கிறது.

முழு வீடியோவும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவின் தலைப்பில் ” ராம்லால் மைதிலி காமெடி ” என ஹாஷ்டாக் வைத்துள்ளதை பார்க்கலாம்.

பீகார் மாநிலத்தை மையமாகக் கொண்ட chandan mishra  யூடியூப் சேனலில் வைரலான வீடியோவில் மணமகனாக இடம்பெற்ற அதே நபர் நடித்த பல வீடியோக்கள் இடம்பெற்று இருக்கின்றன. வைரல் செய்யப்படும் 2020 ஏப்ரலில் வெளியான வீடியோவில் இடம்பெற்ற அதே நபர்கள் திருமண கோலத்தில் நடித்த மற்றொரு காமெடி வீடியோ 2019 டிசம்பரில் பதிவாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், வாயில் குட்கா வைத்திருந்ததால் மணப்பெண் ஆத்திரம் அடைந்து மணமேடையில் மணமகனை அடித்ததாக என செய்தி நிறுவனங்கள் வெளியிட்டது தவறான தகவல்.

அந்த வீடியோ 2020-ல் பீகாரைச் சேர்ந்த யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட காமெடி வீடியோ  என்பதையும், அந்த வீடியோவில் இடம்பெற்ற சிறு காட்சி இணையத்தில் வைரலாகியதை உண்மை என நினைத்து இந்திய அளவில் செய்தி நிறுவனங்களும் தவறாக வெளியிட்டன என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader