ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பின் இஸ்கான் கோவிலுக்குச் சென்றதாகப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

“பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முதலாக ரிஷி சுனக் லண்டனில் உள்ள இஸ்கான் கோயிலுக்குச் சென்று இஸ்கான் குருக்களிடம் ஆசி பெற்றார்!”

Archive Link

மதிப்பீடு

விளக்கம்

பிரிட்டன் நாட்டின் அடுத்தப் பிரதமராக ரிஷி சுனக்(Rishi Sunak) கடந்த அக்டோபர் 25, 2022 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் பூர்வீகத்தைக் கொண்டவர், இந்தியாவின் மருமகன், ஹிந்து ஒருவர் பிரிட்டன் பிரதமர் என்றெல்லாம் செய்தி ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ரிஷி சுனக் லண்டனில் உள்ள இஸ்கான் கோயிலுக்குச் சென்று அங்குள்ள குருக்களிடம் ஆசி பெற்றார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Archive Link

Twitter Link

Twitter Link

உண்மை என்ன ?

வைரலாகும் வீடியோவை ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், ரிஷி சுனக் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அவர் இஸ்கானின் தலைமையகமான Bhaktivedanta Manor எனும் இடத்திற்குச் சென்றது குறித்துத் தனது ட்விட்டர் கணக்கில் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

Twitter link 

கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு இஸ்கான் கோவிலுக்குச் சென்றதாக அதில் பதிவிட்டுள்ளார். இவருடைய ட்விட்டர் பதிவிலும் தற்போது வைரலான வீடியோவிலும் ரிஷி சுனக் ஒரே மாதிரியான உடைகளை அணிந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

ரிஷி சுனக் இஸ்கான் கோவிலுக்குச் சென்றது குறித்து லைவ்மின்ட் செய்தித்தளம் UK PM hopeful Rishi Sunak visits ISKON temple to celebrate Janmashtami எனும் தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், இஸ்கானின் தலைமையகமான Bhaktivedanta Manor தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஜன்மாஷ்டமி விழாவை ஒட்டி ரிஷி சுனக் இஸ்கான் கோவிலுக்கு வருகை தந்தார் என கடந்த ஆகஸ்ட் 18 அன்று பதிவேற்றம் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை இஸ்கானின் குருக்கள் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 18 அன்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by S.B. Keshava Swami (@keshavaswami)

Instagram link 

முடிவு :

நம் தேடலில், ரிஷி சுனக் லண்டன் அருகே உள்ள இஸ்கான் கோவிலுக்குச் சென்று வழிபட்டது உண்மை என்றாலும், பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர் சென்றுள்ளார் என்பது தவறான செய்தி என நம்மால் அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader