5 ரூபாய்க்கு பிஸ்கெட் வாங்கவே மக்கள் இருமுறை யோசிக்கின்றனர் – பிரிட்டானியா நிறுவனர்.

பரவிய செய்தி

5 ரூபாய் பிஸ்கெட் வாங்க மக்கள் யோசிக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம் – பிரிட்டானியா நிறுவனர் குமுறல்.

 

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் தொடங்கி சில்லறை வணிகம் வரையில் உள்ள பொருளாதார மந்தநிலையில் பிரிட்டானியா நிறுவனத்தின் தலைவர் வருண் பெர்ரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளக்கம்

மீபகாலமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருவதால் டாடா உள்ளிட்ட பல நிறுவனங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் போய்வருகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கும் வேலையை இழக்க நேரிட்டுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையில் இருந்து சில்லறை வணிகம் வரை நீள்கிறது.

Advertisement

மேலும் படிக்க : சரிவில் இந்திய ஆட்டோமொபைல் துறை| உலக வங்கி வெளியிட்ட இந்தியாவின் ஜி.டி.பி !

இந்தியாவில் பிரபல பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே-வின் விற்பனை சரிவின் காரணமாக 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் செய்தியில் வெளியாகியது. இதற்கு காரணம், ஜிஎஸ்டி-க்கு பின்னர் பிஸ்கெட்களுக்கான வரியானது 12% இல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதே என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

பார்லே நிறுவனம் மட்டுமல்லாமல் பிரிட்டானியா நிறுவனமும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தின் சரிவு குறித்து பிரிட்டானியா நிறுவனத்தின் தலைவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான வருண் பெர்ரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ” எங்களின் வளர்ச்சி 6% மட்டுமே மற்றும் சந்தை வளர்ச்சி குறைந்து கொண்டு வருகிறது. வருத்தமாக இருக்கிறது, மக்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கவும் இருமுறை யோசிக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது ” எனக் கூறியிருந்தார்.

Advertisement

இந்திய பிஸ்கெட் தயாரிப்பு தொழிலின் சந்தை பங்கில் மூன்றில் ஒரு பங்கினை பிரிட்டானியா நிறுவனம் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

” தேவையும் இல்லை, தனியார் முதலீட்டும் இல்லை, பிறகு வளர்ச்சி எங்கிருந்து வரும் ? அது வானத்தில் இருந்து குதிக்காது. ஆட்டோமொபைல் துறை மிகக் கடுமையான காலத்தில் செல்கிறது. கார்கள், வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஒரு கடினமான இணைப்பு வழியாக செல்கின்றன ” என பஜாஜ் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு முன்பாக கோட்ரேஜ் நிறுவனத்தின் சேர்மன் ஆதிகோட்ரேஜ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சி சார்ந்தது இல்லை. மேலும், நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை, வளர்ச்சியையும் பாதிக்கிறது எனத் தெரிவித்து இருந்தார்.

இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாகி இருப்பது தொழில் நிறுவனங்களை கடந்து அனைத்து துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button