This article is from Sep 30, 2018

இனி இங்கிலாந்து விசா எளிதாக பெற முடியாது!

பரவிய செய்தி

மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியாவை இங்கிலாந்து அரசு நீக்கியது. இனி இந்திய மாணவர்கள் விசா பெற கடுமையான விதிமுறைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

எளிதாக விசா பெறும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தின் நட்பு நாடான இந்தியா இடம் பெறாமல் இருந்தது இந்தியாவை அவமதிக்கும் செயலாக கருதப்படுவதாக இந்திய வம்சாவளித் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

விளக்கம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பித்து வருகிறார்கள். இதில், இந்திய மாணவர்கள் விசா பெறுவது சற்று எளிதாக இருந்து வந்தது. ஆனால், அந்நாட்டின் புதிய விசா கொள்கையால் இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புதிய 4 அடுக்கு விசா விதிமுறைகளை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. புதிய 4 அடுக்கு விசா தொடர்பான குடியேற்றக் கொள்கையை ஜூன் 15-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக எந்த வித இடையூறும் இன்றி எளிதாக விசா பெறலாம்.

” புதிய விசா கொள்கை தொடர்பான பட்டியலில் இங்கிலாந்தின் நட்பு நாடான இந்தியா இடம் பெறாமல் உள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. இதற்கு முன்பாக அந்நாட்டின் நட்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமீரகம், ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், கத்தார், தைவான், சிலி, புருனே, அர்ஜென்டினா, பார்போடோஸ், டிரினிடாட் அன்ட் டொபாகோ, போஸ்ட்வானா ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு எளிதாக விசாக் கிடைக்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டன “.

” இந்த பட்டியலில் சீனா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மெக்ஸிகோ, பக்ரைன், குவைத், செர்பியா, மாலத்தீவு, மெக்காவ் மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற நாடுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கிலாந்தை நட்பு நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா இந்த பட்டியலில் இடம் பெறாமல் உள்ளது “.

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிப்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. ஆங்கில மொழியில் சிறந்து விளங்க வேண்டும், அந்நாட்டில் தங்கிப் படிப்பதற்கு ஏற்ப பொருளாதார சூழல் இருக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இது தொடர்பான தகுதிச் சான்றுகளை மாணவர்கள் சமர்பிக்க வேண்டும்.

ஆனால், புதிய 4 அடுக்கு விசா கொள்கையில் இந்தியா இடம் பெறாததால் சான்றுகள் சமர்பிக்கும் முறையில் பல்வேறு கடுமையான விதிமுறைகளை இந்திய மாணவர்கள் சமாளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால்,”  இந்திய மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ள விண்ணப்ப முறையில் மாற்றம் இல்லை, ஆகையால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைக் கொள்ள வேண்டாம் என இங்கிலாந்தின் NISAU தலைவர் சனம் அரோரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சமநிலையை ஏற்படுத்த இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது “.

 இந்திய முதலீட்டின் மீது தற்போது உள்ள அரசு மெத்தனம் காண்பித்து வருகிறது என நினைக்கிறேன். திறமையானவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்வர்கள் “ என இங்கிலாந்து அரசின் செயலை விமர்சித்து உள்ளார் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் .

இங்கிலாந்து அரசின் புதிய விசா கொள்கை குறித்து பேசிய இந்திய வம்சாவளி தொழிலதிபரும், இங்கிலாந்துக்கான சர்வதேச மாணவர்கள் விவகார கவுன்சில் தலைவரான கரண் பிலிமோரியா, “ இந்தியாவை அவமதிக்கும்படி இந்த நடவடிக்கை உள்ளது. இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்து அரசு மிகப்பெரிய அநீதியை இழைத்து உள்ளனர் “ என்று கூறியுள்ளார். மேலும், இங்கிலாந்தில் படிக்கும் மாணவர்களும் இதை அவமானப்படுத்திய செயலாக கருதுகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader