ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டு செல்லும் கப்பலின் புகைப்படம் உண்மையா ?

பரவிய செய்தி

வெள்ளைக்காரன் நம் நாட்டைக் காலி பண்ணிட்டு போன கடைசி கப்பலின் புகைப்படம்.

 

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயப் படைகள் 1947 முதலே பம்பாயில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு கப்பலில் புறப்பட்டன. இந்தியாவில் இருந்து இறுதியாக ஆங்கிலேயப் படைகள் வெளியேறி கப்பலில் செல்லும் காட்சி என சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், sainiksamachar என்ற இணையதளத்தில் ” Mountbatten’s Good-bye To British Troops ” என்ற தலைப்பில் வெளியான தகவலை காண முடிந்தது. அதில், வைரலான புகைப்படம் இடம்பெற்றே இருந்தது. எனினும், அதில் இந்தியாவை விட்டு வெளியேறும் இறுதியான ஆங்கிலேயே படைகள் எனக் குறிப்பிடவில்லை.

மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என அன்றைய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு ” Google Art & Culture ” -ல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிலும், இங்கு பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை விட்டு செல்வதை நீங்கள் காணலாம் என இதே படமானது இடம்பெற்று இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, பிற சமூக ஊடகங்களில் புகைப்படம் குறித்த தேடலில், ” இந்தியாவில் இருந்து ஆங்கிலேயே படைகள் வெளியேறும் வீடியோ பதிவுகளே ” கிடைத்துள்ளன. British Pathe என்ற youtube தளத்தில் 2014 ஏப்ரல் 13-ம் தேதி பதிவான வீடியோவில் ” British Troops Leave India (1947) ” என்றே தலைப்பிட்டு இருந்தனர். அந்த வீடியோவில், இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தின் உள்ள Georgic கப்பலில் ஆங்கிலேயே படைகள் செல்வதை காண முடிகிறது.

Advertisement

British Pathe என்ற சேனல் பிரிட்டிஷ் அரசு சார்ந்த பழமையான வீடியோக்களின் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறது. அதே சேனலில், ” Farewell To India – 1st Battalion Somerset Light Infantry Leave India (1948)” என்ற தலைப்பில் மற்றொரு வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

அதில், இந்தியாவில் இருந்து முதல் பட்டாலியன் சோமர்செட் லைட் இபான்ட்ரி ஆனது இந்தியாவை விட்டு செல்கிறது எனக் கூறியுள்ளனர். அவர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியும், அவர்கள் கப்பலில் செல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.

” British Movietone ” என்ற மற்றொரு பிரிட்டிஷ் சார்ந்த youtube தளத்தில் ” FIRST BRITISH TROOPS LEAVE INDIA – NO SOUND” என்ற தலைப்பில் வைரலாகும் புகைப்படத்தின் வீடியோவையே வெளியிட்டு இருந்தனர்.

முடிவு :

இந்தியாவில் இருந்து கப்பலில் வெளியேறும் ஆங்கிலேய படைகள் எனப் பரவும் புகைப்படங்கள் உண்மையில் ஆங்கிலேயப் படைகளே. இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் 1947-ல் பம்பாயில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டனர்.

ஆனால், அந்த புகைப்படங்கள் இறுதியான படைகள் அல்ல. அவ்வாறு எங்கும் குறிப்பிடவும் இல்லை. அதற்கு பின்பு இந்திய-பிரிட்டிஷ் படைகள் Farewell நிகழ்ச்சிக்கு பிறகு வெளியேறிய மற்றொரு படையின் வீடியோவும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button