This article is from Sep 23, 2018

கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட 2 அனா நாணயமா ?

பரவிய செய்தி

கிழக்கிந்திய கம்பெனியால் 1818 ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டு அனா நாணயம் .

மதிப்பீடு

சுருக்கம்

பிரிட்டிஷ் அரசாங்கம் தாமரை பொறித்த இரண்டு அனா நாணயத்தை வெளியிடவில்லை .

விளக்கம்

17ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பனி நாணயங்களை வெளியிட்டனர் . மசுலிபட்டினம் ,மெட்ராஸ் தெற்கு , சூரத் , கொல்கத்தா போன்ற பகுதிகளில் தனி தனியான ஜனாதிபதிகளையும் , பண அமைப்பையும் வைத்திருந்தார்கள் .

இவை அனைத்தையும் 1835 இல் அவர்கள் முழுவதுமாக கலைத்தார்கள் . அதன் பின்னர் இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது .

1835 க்கு பிறகு புதிய நாணயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் படி செய்தார்கள் . ஆனால் 1862 ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசர்களின் படங்களை நாணயங்களில் அச்சிட்டனர் .

1818 ஆண்டு வெளியிடப்பட்டதாக கூறப்படும் இந்த நாணயத்தில் பல தவறுகள் உள்ளன . 1800 களில் பெரும்பாலும் கால் மற்றும் அரை அனாக்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்தது .

மேலும் இந்த படத்தில் உள்ள நாணயத்தில் Aana என்ற ஆங்கில எழுத்தில் தவறு உள்ளது . பிரிட்டிஷ் நாணயங்களை பார்த்தால் அதில் 2 Aana என்று இல்லாமல் 2 Annas என்றே ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிற்கும் . இவ்வாறு பல உதாரணங்கள் இந்த நாணயத்தை பற்றி கூறலாம் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader