This article is from Nov 10, 2019

புரூஸ்லீ நுன்ச்சக் மூலம் டேபிள் டென்னிஸ் விளையாடும் காட்சி உண்மையா ?

பரவிய செய்தி

வெச்ச குறி தப்பாது.1970 இல் எடுக்கப்பட்ட புரூஸ்லீ டேபிள் டென்னிஸ் ஆடும் அரிய காணொளி.

மதிப்பீடு

விளக்கம்

புகழ்பெற்ற தற்காப்பு கலை நாயகன் புரூஸ்லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் காட்சியில், அந்த விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் துடுப்புகளை விட நுன்ச்சக் மூலம் அதிவேகமாக விளையாடுவது பதிவாகி இருக்கிறது. புரூஸ்லீ உடைய வேகத்திற்கு இந்த விளையாட்டு எடுத்துக்காட்டு என இவ்வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Facebook post link | archived link  

” வெச்ச குறி தப்பாது.1970 இல் எடுக்கப்பட்ட புரூஸ்லீ டேபிள் டென்னிஸ் ஆடும் அரிய காணொளி ” என Lakshmankumar Raju என்பவர் பதிவிட்ட வீடியோ பதிவு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.

இவ்வீடியோவை புரூஸ்லீ ரசிகர்கள் முகநூல் , வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்தும்வருகின்றனர். எனவே, வைரலாகும் புரூஸ்லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய தீர்மானித்து இருந்தோம் . 

உண்மை என்ன ? 

Youtube video | archived link 

புரூஸ்லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் அரிய காணொளி குறித்து தேடிய பொழுது 2008 டிசம்பர் 16-ம் தேதி Ted Bundo என்ற யூட்யூப் சேனலில் ” Bruce Lee Ping Pong (Full Version) ”  என்ற தலைப்பில் அதே வீடியோ இடம்பெற்று இருந்தது. அந்த வீடியோவின் கம்மெண்டில், வீடியோவில் இருப்பது புரூஸ்லீ இல்லை, போலியான வீடியோ என பதிவிட்டு இருந்தததை காண நேரிட்டது. மேலும் , வீடியோவின் இறுதியில் நோக்கியா செல்போனின் விளம்பரம் இடம்பெற்று இருந்தது.

இதையடுத்து விரிவாக தேடிய பொழுது, 2015-ல் adweek எனும் இணையதளத்தில் “5 Brilliantly Faked Viral Ads That People Still Keep Thinking Are Real ” என்ற தலைப்பில் வெளியான தகவல்களில் புரூஸ்லீ டேபிள் டென்னிஸ் விளையாடுவதாக கூறும் வீடியோ குறித்த தகவல் முதலில் இடம்பெற்று இருந்தது. 

அதில், குங் ஃபு மாஸ்டர் புரூஸ்லீ நுன்ச்சக் மூலம் பிங் பாங் (மேசை பந்தாட்டம்) விளையாடுவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால்,  உண்மையில் நோக்கியா N96 புரூஸ்லீ லிமிடெடு எடிஷன்-க்காக 2008-ல் உருவாக்கப்பட்ட விளம்பரம் எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதை JWT Beijing என்ற ஏஜென்சி உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

நோக்கியா N96 புரூஸ்லீ என்ற வார்த்தையை பயன்படுத்தி தேடிய பொழுது ” Nokia N96 bruce lee limited edition commercial ” என யூட்யூப் வீடியோக்கள் 2008-ல் நவம்பர் மாதம் வெளியாகி இருக்கின்றன. மேலும்,  JWT Beijing ஏஜென்சியின் அதிகாரிகள் தரப்பில் அளித்த பேட்டி agency asia-வில் வெளியாகி இருக்கிறது.

2008-ம் ஆண்டு புரூஸ்லீ போன்ற உருவ ஒற்றுமைக் கொண்ட ஒருவரை வைத்து டேபிள் டென்னிஸ் விளையாடும் காட்சிகள் முழுவதுமாக எடுக்கப்பட்டு உள்ளன. பின்னர், இறுதியாக ஆடியோ மற்றும் பந்தின் உருவம் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ” டிஜிட்டல் கிரியேஷன் ” இவை.

முடிவு : 

நம்முடைய தேடலில், 1970-களில் புரூஸ் லீ நுன்ச்சக் மூலம் டேபிள் டென்னிஸ் விளையாடும் அரிய காணொளி என வைரலாகும் வீடியோ 2008-ல் ” Nokia N96 bruce lee limited edition “-க்காக எடுக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரம் மட்டுமே.

இதனை உருவாக்கிய JWT Beijing என்ற ஏஜென்சி அளித்த பேட்டி, யூட்யூப் தளத்தில் வெளியான உண்மையான வீடியோ ஆகியவற்றின் அடிப்படையில் வைரலாகும் வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டவை என அறிய முடிகிறது.

புரூஸ் லீ நுன்ச்சக் மூலம் டேபிள் டென்னிஸ் விளையாடுவதாக பகிர்ந்து வரும் வீடியோ நோக்கியா விளம்பரமே. தவறான வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader