This article is from Jul 03, 2020

Budweiser நிறுவன பீர் தொட்டியில் ஊழியர்கள் சிறுநீர் கழித்ததாக பரவும் வதந்தி !

பரவிய செய்தி

Budweiser நிறுவனம் தங்களின் ஊழியர்கள் பல ஆண்டுகளாக தங்கள் பீர் தொட்டியில் சிறுநீர் கழித்ததை ஒப்புக்கொண்டுள்ளது.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த Budweiser எனும் பீர் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாகவே அங்குள்ள பீர் தயாரிப்பு தொட்டியில் சிறுநீர் கழித்து வந்தது தெரிய வந்துள்ளதாக வெளியான கட்டுரையின் ஸ்க்ரீன்ஷார்டை வைத்து Budweiser குடிக்கும் நண்பர்களுக்கு டக் செய்யுமாறு சென்னை மீம்ஸ் பக்கத்தில் மீம்ஸ் ஒன்று வெளியாகி உள்ளது. இதன் உண்மைத்தன்மையைக் கூறுமாறு ஃபாலோயர்ஸ் தரப்பில் கேட்கப்பட்டது.

Twitter link | archive link 

கடந்த சில நாட்களாக Budweiser பீர் நிறுவனத்தின் தொட்டியில் ஊழியர்கள் சிறுநீர் கழித்ததாக பரவி வரும் தகவலை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதிக அளவில் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்திய அளவிலும் அதற்காக அதிக அளவில் மீம்ஸ் பதிவிட்டு உள்ளார்கள்.

உண்மை என்ன ? 

வைரலாகும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் உள்ள ” Budweiser admits several employees have been pissing into their beer tanks for years ” என்ற தலைப்பை வைத்து தேடிய பொழுது ” www.foolishumor.com ” எனும் இணையதளத்தில் அதே கட்டுரை வெளியாகி இருந்தது.

அதே இணையதளத்தில், அந்நிறுவனத்தின் ஊழியர் 12 ஆண்டுகளாக பீரில் சிறுநீர் கழித்ததை ஒத்துக் கொண்டுள்ளதாக மற்றொரு கட்டுரையையும் வெளியிட்டு உள்ளது.

வைரலாகும் தகவலின் உண்மையான பதிவை வெளியிட்ட foolishumor இணையதளத்தில் ” ஒரு நகைச்சுவயான பக்கமாகும், அதன் நோக்கம் பொழுதுபோக்கு. முட்டாள்தனமான நகைச்சுவை கட்டுரைகள் யாவும் புனைகதைகள் மற்றும் உண்மையுடன் ஒத்துப்போவதில்லை ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1876 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அன்ஹீசர்-புஷ் பீர் தயாரிப்பு 2008-ம் ஆண்டில் பெல்ஜியத்தை மையமாகக் கொண்ட இன்பெவ் வாங்கி பல நாடுகளுக்கு Budweiser-ஐ விற்பனை செய்து வருகிறது. அதன் விற்பனை அமெரிக்காவில் குறைந்து இருந்தாலும் அந்நாட்டிற்கு வெளியே விற்பனை செய்து வந்தது. சீன, பிரேசில் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தங்கள் நிறுவனம் தொடர்பாக பரவிய நையாண்டி கட்டுரைக்கு Budweiser பதில் அளித்ததற்கு சீன வெய்போ பயனர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து உள்ளதாக குளோபல்டைம்ஸ் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link 

நகைச்சுவைக்காக வெளியிட்ட நையாண்டிப்பதிவை உண்மை என நினைத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் Budweiser நிறுவனத்தின் பெயரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு முன்பாகவும் பல்வேறு புனையப்பட்ட நையாண்டிக்கதைகளை உண்மை என நினைத்து சமூக வளைதளங்களில் வைரல் செய்தது தொடர்பாக நாம் பல கட்டுரைகளை வெளியிட்டு உள்ளோம்.

மேலும் படிக்க : குவியும் சடலங்களின் குழப்பதால் ஊழியர் உடல் எரிக்கப்பட்டதா ?

முடிவு : 

நமது தேடலில், Budweiser நிறுவனத்தின் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல ஆண்டுகளாக நிறுவனத்தின் பீர் தொட்டியில் சிறுநீர் கழித்ததாக பரவும் தகவல் உண்மையில்லை. அது நையாண்டிக்காக உருவாக்கப்பட்ட புனையப்பட்ட கதையே என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader