This article is from Jun 20, 2018

புதிய தார் சாலையில் பாதியளவு புதைக்கப்பட்ட நாய்..!

பரவிய செய்தி

ஆக்ராவில் புதிதாகப் போடப்பட்ட தார் சாலையில் உயிருடன் புதைக்கப்பட்ட நாய். பாதியளவு தார் சாலையில் புதைக்கப்பட்ட நாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதிப்பீடு

விளக்கம்

மீபத்தில் புதிதாகப் போடப்பட்ட தார் சாலை ஒன்றில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் நாய் ஒன்று இறந்து கிடக்கும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. முதலில் இந்த புகைப்படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என நினைக்கப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த கொடூர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் சையது கிராஸிங் என்னும் பகுதியில் இருந்து சர்க்கியூட் ஹவுஸ் மற்றும் தாஜ்மகால் வரை உள்ள பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளை தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்துள்ளது. இந்த கட்டுமானப் பணிகளின் போது தொழிலாளர்கள் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நாயை விரட்டி விடாமல் அதன் மீதே தாரை ஊற்றி சாலை போட்டுள்ளனர் என்றும், அதை நேரில் பார்த்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆக்ராவின் சதார் காவல் நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து எப்.ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செயலை செய்த அடையாளம் தெரியாத நபரை தேடும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

“ சையது கிராஸிங் சாலையில் இருந்து சர்க்கியூட் ஹவுஸ் மற்றும் தாஜ்மகால் வரை புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. சாலையின் ஒரு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த நாயை விரட்டாமல் அல்லது அகற்றாமல் நாயின் மீது கொதிக்கும் தாரை ஊற்றியுள்ளனர். பின் ரோடு ரோலரை வைத்து அழுத்தியதில் நாயின் பாதி உடல் தார் சாலையில் புதைந்து உள்ளது. தற்போது நாயின் உடல் அகற்றப்பட்டுள்ளது ” என சமூக ஆர்வலர் நரேஷ் பராஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், PWD துறையில் இருந்து சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட RP infraventure private limitedநிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புகார்கள் எழுந்ததை அடுத்து கிரேன் கொண்டு சாலையில் புதையுண்டு கிடந்த நாயின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

தார் சாலையில் கட்டுமானத் தொழிலாளர்களின் அலட்சியத்தால் பாதி உடல் சாலையில் புதையுண்டு கிடைக்கும் இறந்த நாயின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader