சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரின் மர்ம உறுப்பை நாய் கடித்ததா ?

பரவிய செய்தி

அமெரிக்காவில் வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுமிகளை கற்பழிக்க முயன்ற முதியவர் ஒருவரின் ஆணுறுப்பை அந்த சிறுமிகள் வளர்க்கும் நாய் ஒன்று கடித்துக் குதறி அவர்களை காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

பெண்கள், குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் மேலோங்கி காணப்படும். அப்பொழுது, பாலியல் வன்கொடுமை தொடர்பாக உணர்ச்சி தரும் கதைகள் பதிவிட்டால் சமூக ஊடகத்தில் வைரலாகி விடும். அப்படியொரு செய்தியை பற்றி காண்போம்.

Advertisement

” அமெரிக்காவில் உள்ள அர்கான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ரான்டால் ஜேம்ஸ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் வீட்டில் இருந்த 3 மற்றும் 6 வயது மகள்களை வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போழுது, சிறுமிகள் ரான்டால் ஜேம்ஸ்(63)-யிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டு உள்ளனர்.

அந்நேரத்தில் அங்கிருந்த வளர்ப்பு நாய் ஆனது ரான்டால் ஜேம்ஸ் மீது கடித்து குதறியதோடு, அவரின் பிறப்புறுப்பையும் கடித்து தூண்டித்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த முதியவர் தற்பொழுது மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார் ” என சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செய்தி.

இந்த செய்தி இன்று அல்ல கடந்த வருடத்திற்கு முன்பிருந்தே குறிப்பிட்ட செய்திகள் தளங்கள் , சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியது. தமிழகத்தில் ” அம்மா ” என்ற முகநூல் பக்கத்தில் பதிவான இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கில் லைக் மற்றும் ஷேர்கள் கிடைத்தன. உலக அளவில் இந்த கதை பிரபலமாகி இருக்கிறது.

Advertisement

உண்மை என்ன ?

அமெரிக்காவின் அர்கான்ஸ் மாகாணத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய வந்த முதியவர் என ஒருவரின் புகைப்படம் மற்றும் நாயின் புகைப்படம் பதிவுகளில் இடம்பெற்று இருக்கும். அப்படத்தில் இருப்பவரின் பெயர் ரான்டால் ஜேம்ஸா , புகைப்படம் குறித்தும் ஆராய்ந்து பார்த்தோம்.

2017-ல் மே 16-ம் தேதி mirror என்ற செய்தி தளத்தில் “Oh baby yeah!” – Patient has amazing reaction to ketamine as doctors reset his broken ankle ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் வைரலாக புகைப்படத்தில் இருக்கும் முதியவரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்ததை பார்க்க முடிந்தது.

” ஸ்கேட்போர்டிங் பொழுது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நீல் என்ற நோயாளிக்கு மருத்துவர்கள் வீரியமிக்க வலிநிவாரணியான ketamine-ஐ அளித்த காரணத்தினால் ” Oh baby ” , ” I’m the man ” என கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தனர். சிகிச்சையின் பொழுது நீல் எழுப்பிய கூச்சலை வீடியோவாக எடுத்து உள்ளனர் “.

இது மட்டுமின்றி, அர்கான்ஸ் பகுதியில் பாலியல் வன்புணர்வு செய்ய வந்த முதியவரை வளர்ப்பு நாய் கடித்து குதறியதாக அதிகாரப்பூர்வ முதன்மை ஊடங்களில் எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. அந்த கதையில் உண்மைத்தன்மை இல்லை. Neon Nettle என்ற இணையபக்கம் ட்ராபிக்காக உண்மை இல்லாத புரளிகளை எழுதியதன் விளைவால் வைரலாகி உள்ளது.

முடிவு :

அர்கான்ஸ் பகுதியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய வந்த முதியவர் என பரவிய படமானது தவறான புகைப்படம் என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமிகளை வளர்ப்பு நாய் காப்பாற்றியதாக அர்கான்ஸ் மாகாணத்தில் முதன்மை செய்திகளில் வெளியாகவில்லை. செய்தியானது புரளி கதையே என்றும் தெரிய வந்துள்ளது. இதைத்தவிர்த்து, மேலும் பல தவறான படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button