துபாய் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட டாடா ஸ்டீல் & வோல்டாஸ் !

பரவிய செய்தி
உங்களுக்கு தெரியுமா ?டாடா ஸ்டீல் புர்ஜ் கலீஃபாவில் பயன்படுத்தப்பட்டது மற்றும் டாடா வோல்டாஸ் பூமியின் மிக உயரமான கட்டிடத்தில் ஏர் கண்டிஷனிங் சேவையை வழங்குகிறது.
மதிப்பீடு
விளக்கம்
உலகின் உயரமான கட்டிடமாக கருதப்படும் 828 மீட்டர் உயரம் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் டாடா நிறுவனத்தின் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல், அந்த கட்டிடத்தில் குளிர்சாதன சேவையை டாடா வோல்டாஸ் வழங்கி இருக்கிறது என ரத்தன் டாடா புகைப்படத்துடன் கூடிய பதிவு வாசகர் ஒருவரால் பகிரப்பட்டு உண்மைத்தன்மை குறித்து கேட்கப்பட்டது.
2018-ல் டாடா நிறுவனத்தின் இணையதளத்தில் நியூஸ்ரூம் பிரிவில், ” 1943-ல் ஹவுரா பாலம் முதல் 2010ல் புர்ஜ் கலீஃபா வரை டாடா ஸ்டீல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறந்த கட்டமைப்புகளை கட்டியெழுப்ப உதவியது ” எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 2018-ம் ஆண்டு மே மாதம் டாடா குழுமத்தின் நிறுவன ட்விட்டர் பக்கத்தில், ” உங்களுக்கு தெரியுமா துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா உலகின் மிக உயரமான கட்டிடம். ஆனால், எங்கள் நிறுவனங்களில் எது அதன் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்கு உதவியது என்பதை உங்களால் யூகிக்க முடியுமா ? ” என ட்வீட் பதிவிட்டு இருந்தனர்.
Yes, it is Tata Steel and Voltas! 😎 @TataSteelEurope supplied 39,000 tons of steel rebar to build this iconic structure, while @myvoltas helps keep it cool with a 13,000-ton air conditioning system.
— Tata Group (@TataCompanies) May 28, 2018
அந்த ட்வீட் பதிவிற்கு கீழே, ” ஆம், அது டாடா ஸ்டீல் மற்றும் வோல்டாஸ் ! இந்த தனித்துவமான கட்டிடமைப்பை உருவாக்க டாடா ஸ்டீல் யூரோப் 39,000 டன் ஸ்டீல் வழங்கியும்,13,000 டன் ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்துடன் குளிர்ச்சியாக இருக்க மைவோல்டாஸ் உதவுகிறது ” என பதிலாக கூறப்பட்டுள்ளது.