இந்து குழந்தையை புர்கா அணிந்த ஆண் கடத்துவதாகப் பரப்பப்படும் பொய் வீடியோ !

பரவிய செய்தி

குழந்தைகளை கடத்துவதற்குக்காக ஹிஜாப் பயன்படுத்தப்படுகிறது. கவனமாக இருங்கள்.

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

ஸ்லாமியர்களுக்கு எதிராகப் பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அவற்றின் உண்மைத் தன்மைகள் குறித்து ‘யூடர்ன்’ தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறோம். 

Archive link 

இந்நிலையில் ஆண் ஒருவர் பர்தா அணிந்து குழந்தையைக் கடத்த முயன்றதாக 30 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. குழந்தை கடத்துவதை கையும் களவுமாகப் பிடித்து அவரை ஆண் ஒருவர் அடிக்கின்றார். இந்த வீடியோவினை பதிவிட்டு, அப்துல் என்பவர் பர்தா அணிந்து இந்து குழந்தையைக் கடத்த முயன்றதாகப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

ஆண் ஒருவர் பர்தா அணிந்து இந்து குழந்தையைக் கடத்த முயன்றதாகப் பரவும் வீடியோவின் கீ ஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். Ankur-Ankit Jatuskarn’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி பரவக் கூடிய வீடியோவின் முழு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 

Facebook link 

7 நிமிடம் 45 வினாடி கொண்ட அந்த வீடியோவின் ஒரு வினாடிக்கும் (22வது வினாடியில்) குறைவான நேரத்திற்குப் பொறுப்பு துறப்பு (Disclaimer) போடப்பட்டுள்ளது. 

அதில், “இந்த வீடியோ முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காகக் கற்பனையாக எடுக்கப்பட்டது. இது யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதல்ல. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டு அவரது பேஸ்புக் பக்கத்தை ஆராய்கையில், இதே போலப் பல சித்தரிப்பு வீடியோக்கள் பதிவிட்டுள்ளதை அறிய முடிகிறது. அவற்றிலும் ஒரு வினாடி மட்டுமே சித்தரிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவரது ‘Ankur Jatuskaran’ என்ற பேஸ்புக் பக்கத்திலும் இத்தகைய வீடியோக்கள் பதிவிட்டுள்ளார். அப்பக்கத்தை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இந்நபரின் பெரும்பாலான வீடியோக்கள் வன்முறைச் சம்பவங்களாகவே உள்ளன. ஒரு தவறு நிகழ்வதாகவும், அதனை இவர் தட்டி கேட்பது போலவும் சித்தரித்து வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. 

இவற்றிலிருந்து பர்தா அணிந்த ஆண் ஒருவர் இந்து குழந்தையைக் கடத்தியதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அந்த வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க : இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்த இஸ்லாமிய மதகுரு எனப் பரப்பப்படும் பொய்யான வீடியோ

இதேபோல், இஸ்லாமிய மௌலானா ஒருவர் இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என வீடியோ ஒன்று பரவியது. அது சித்தரிக்கப்பட்டது என்ற உண்மைத் தன்மையைக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். 

முடிவு : 

நம் தேடலில், பர்தா அணிந்த ஆண் ஒருவர் குழந்தையைக் கடத்த முயற்சி செய்ததாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. 

Please complete the required fields.




Back to top button