சென்னை கனமழையால் சாலையில் கவிழ்ந்த பேருந்து எனப் பரவும் 2018-ன் வீடியோ !

பரவிய செய்தி

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்… உபிஸ் – ஒரு சொட்டு கூட தேங்கவில்லை..

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நாட்களில் கொட்டித் தீர்த்த, கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், பெரும்பாலான இடங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பட்டன.

மேலும் இங்கு வெள்ளநீர் வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது திரும்பி கொண்டிருக்கும் சூழ்நிலையில், சென்னை கனமழையால் பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்ததாகக் கூறி வீடியோ ஒன்று அதிமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் Tamil WhatsApp Status Creator என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த 2018 நவம்பர் 23 அன்று “சென்னையில் இன்று பெய்த கனமழையால் சாலையில் கவிழ்ந்த பேருந்து ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம் பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2018-ல் அதிமுக ஆட்சியின் போதே ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

மேலும் படிக்க: சென்னையில் தேங்கிய மழைநீரை புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றுவதாகப் பரப்பப்படும் வதந்தி !

மேலும் படிக்க: சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் நீந்துவதாகப் பரவும் ஜார்ஜியா வீடியோ !

இதற்கு முன்பும், சென்னை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாக பரவி வந்தன. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் நீந்துவதாகப் பரவும் ஜார்ஜியா வீடியோ !

முடிவு:

நம் தேடலில், சென்னை கனமழையால் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து என சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ கடந்த 2018-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader