நிலவில் கால் பதித்த ஃபஸ் அல்ட்ரின் ஏலியனைக் கண்டதாக கூறினாரா ?

பரவிய செய்தி

ஃபஸ் அல்ட்ரின் நிலவில் கால் பதித்த இரண்டாவது நபர், நிலவில் இருந்து ஏலியன்களை பார்த்ததாகவும், அதனை எதிர்க்கொண்டதாகவும் தற்போது வரை நாசாவிற்கும், உலக மக்களுக்கும் கூறி வருகிறார். இன்று மிகச்சிறந்த விண்வெளி வீரர் ” உண்மை கண்டறிதல் சோதனையில் ” தான் கூறியதை உண்மை என நிரூபித்து உள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

ஃபஸ் அல்ட்ரின் கூறிய வார்த்தையில் திரித்து தவறாக புரிந்து கொண்டு செய்திகளில் வெளியாகி இருக்கும் என நாசாவின் sservi.nasa தளத்தில் David Morrison குறிப்பிட்டு உள்ளார்.

விளக்கம்

வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆய்வுகள், கேள்விகள் எப்பொழுதும் மனிதர்களுக்கு ஆர்வத்தை அளிக்கக்கூடியவை. ஆகையால், சமூக வலைதளங்களில் கூட விண்வெளி சார்ந்த செய்திகள், வேற்றுக்கிரகவாசிகள் குறித்த செய்திகள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகும்.

நிலவில் தடம் பதித்த ஃபஸ் அல்ட்ரின் எனும் விண்வெளி வீரர் UFO-ஐ பார்த்ததாகவும், ” Lie detecting test” உட்படுத்தப்பட்டதில் அவர் கூறுவது உண்மை என நிரூபிக்கப்பட்டதாகவும் உலகம் முழுவதும் பரவிய, பரவிக் கொண்டிருக்கும் செய்தியாகும். எனினும், இந்த கூற்றிக்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்பதே உண்மை.

1969 -ல்  நடைபெற்ற மிஷனில் ஃபஸ் அல்ட்ரின் UFO-ஐ பார்த்ததாக கூறும் செய்திகள் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு ஆதாரங்களும் இல்லை. இது குறித்து நாசாவின் sservi.nasa.gov தளத்தில் 2007-ல் David Morrison கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில், ” ஃபஸ் அல்ட்ரின் அந்த நோக்கத்தில் கூறவில்லை. டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது  பேனல் பற்றிய கலந்துரையாடலை மட்டும் பிரித்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விண்வெளி வீரர்கள் UFO-வை பார்த்தாக வெளியிட்டனர் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஒருமுறை Reddit-ல் உள்ள Ask me anything பிரிவில் ” நாங்கள் பார்த்தது ஏலியன் இல்லை  ” என ஃபஸ் அல்ட்ரின் தெரிவித்து இருந்ததாக Independent செய்தியில் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த சர்ச்சை பற்றி பதில் அளித்த ஃபஸ் அல்ட்ரின் செய்தித்தொடர்பாளர், ஃபஸ் அல்ட்ரின் UFO-ஐ கண்டதாக எங்கும் கூறவே இல்லை. அவர் ” உண்மை கண்டறிதல் சோதனை  ”  இல் உட்படுத்தப்பட்டார் எனக் கூறுவதெல்லாம்  பொய். செய்திகளில் தவறாக புரிந்துக் கொண்டு இவ்வாறு வெளியாகி இருக்கலாம். அவர் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட UFO-வை பார்த்தாக கூறவில்லை ”  எனத் தெரிவித்தார்.

ஃபஸ் அல்ட்ரின் பலமுறை இந்த சர்ச்சை கருத்தை மறுத்து உள்ளார். ஆனால், மீண்டும் மீண்டும் அதே தவறான செய்தி பரவி வருகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close