This article is from Mar 06, 2018

Cadbury தயாரிப்புகளில் HIV நோயாளியின் இரத்தம் கலந்ததா ?

பரவிய செய்தி

Cadbury தயாரிப்புகளில் அந்நிறுவனத்தில் வேலை செய்தவரின் HIV நோயினால் பாதித்த இரத்தம் கலந்ததை கண்டறிந்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே, அடுத்த சில வாரங்களுக்கு Cadbury சாக்லேட்களை யாரும் வாங்கி சாப்பிட வேண்டாம், இது குறித்து BBC செய்தியில் வெளிவந்துள்ளது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இதை உடனடியாக இந்த செய்தியை பகிரவும்.

மதிப்பீடு

சுருக்கம்

HIV-யால் பாதிக்கப்பட்ட இரத்தத்தை சாக்லேட் தயாரிப்புகளில் கலந்தவர் என்று காண்பிக்கும் படமானது நைஜீரியா குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரின் புகைப்படம் ஆகும்.

விளக்கம்

HIV வைரஸால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முழுவதுமாக பாதிப்படைந்து எய்ட்ஸ் நோய் உண்டாகிறது. இந்த வகை வைரஸ் பல நாடுகளில் பரவி அதிகளவில் மரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. எனினும், தற்போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த செய்திகளை நாம் அதிகம் கேட்பதில்லை.

ஆனால், சமூக வலைத்தளங்களில் எய்ட்ஸ், HIV வைரஸ் பற்றிய அதிகம் காணப்படும் தவறான வதந்திகளை பார்க்க முடிகிறது. சமீபத்தில், பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான Cadbury நிறுவனத்தின் தயாரிப்புகளில் HIV-யால் பாதிக்கப்பட்ட பணியாளரின் இரத்தம் கலந்ததாகக் கூறி செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என்றே கூற வேண்டும்.

cadbury hiv guy

கைதானவரின் படம் :

நைஜீரியாவின் நயன்யா மோட்டார் பார்க்கில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில் 70-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இத்தகைய கொடூரத் தாக்குதலை செயல்படுத்த உறுதுணையாக இருந்த Aminu ogwuche என்பவரை நைஜீரியா அரசு சூடானில் கைது செய்தனர்.

சூடான் அரசின் உதவிடன் நைஜிரியாவில் உள்ள Nnamdi Azikiwe international Airport-க்கு ஜூலை 15, 2014-ல் அழைத்து வரப்பட்டு நைஜீரியன் இன்டெர்போல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை. 

Cadbury தயாரிப்புகளில் எய்ட்ஸ் நோயாளியின் இரத்தம் கலந்தது என்று எவ்வாறு செய்திகள் பரவியதோ! அதேபோல் பிரபல குளிர்பானங்களான Pepsi, Frooti , Maza போன்றவற்றின் தயாரிப்பின் போது எய்ட்ஸ் நோயாளியின் இரத்தம் கலந்ததாகக் கூறி வதந்திகள் பரவின. தயாரிக்கப்படும் பொருட்களின் பெயர்கள் மட்டுமே மாறுகின்றன. ஆனால், வதந்தி மாறியபாடு இல்லை.

HIV வைரஸ் :  

Centers of Disease Control and Prevention (CDC), HIV வைரஸால் நீண்ட காலம் மனிதர்களின் உடலில் இருந்து வெளியேறிய இரத்தம், வேர்வை, திரவம், கண்ணீர், எச்சில் போன்றவற்றில் தொடர்ந்து வாழ இயலாது. பரிசோதனை ஆய்வகத்தில், உடலில் இருந்து வெளியேறி வெளிப்புற பகுதிகளில் வைரஸால் வாழ முடியவில்லை மற்றும் அவற்றால் பரவ இயலவில்லை என்று கூறியுள்ளனர்.

ஒருவேளை HIV பாதித்தவரின் இரத்தம் குளிர்பானங்கள் , சாக்லேட் போன்ற எந்தவொரு வெளிப்புற பகுதிகளில் கலந்தாலும் வைரஸால் வாழவோ , பெருக்கம் அடையவோ முடியாது. இதுவரை சுற்றுப்புற பகுதிகளில் இருந்து HIV பரவியதாகக் கூறி எந்தவொரு அடையாளமும் காண வில்லை என்று CDC பதில் அளித்துள்ளது.

மேலும் இதேபோன்று 2004-ல் உணவகத்தில் சமைப்பவர் மற்றும் 2006-ல் அண்ணாச்சி வெட்டியவரின் கைகளில் இருந்து வெளியான இரத்தத்தில் இருந்து எய்ட்ஸ் பரவியதாகக் கூறி வதந்திகள் பரவியதை நாம் அனைவரும் அறிந்ததே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader