This article is from Jan 24, 2019

Dairy milk சாக்லேட்டில் புழுக்கள் | குழந்தை மரணமா ?

பரவிய செய்தி

இந்த டைரி மில்க் சாக்லேட் சாப்பிட்டதால் குழந்தை இறந்த பரிதாபநிலை. இனி எந்த குழந்தைக்கும் வர வேண்டாம் தயவு செய்து இதை எல்லோருக்கும் பகிருங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

டைரி மில்க் சாக்லேட் உண்டதால் குழந்தை இறந்ததாகக் கூறும் புகைப்படங்கள் அனைத்தும் வெவ்வேறு செய்திகளில் இருந்து எடுத்து தவறான செய்தியாக இணைக்கப்பட்டவை. படங்களின் விவரங்களை கீழே விரிவாக படிக்கவும்.

விளக்கம்

Cadbury dairy milk சாக்லேட்டில் புழு, இறந்த குழந்தையின் உடல், வயிற்றில் இருந்து புழு வரும் படம் என பல படங்கள் இணைத்து டைரி மில்க் சாக்லேட் உண்டதால் குழந்தை இறந்து உள்ளதாக நீண்டகாலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இவற்றில் உள்ள படங்களின் விவரங்களை தனித்தனியாக காண்போம்.

குழந்தை வயிற்றில் புழு :

2 வயது பெண் குழந்தை குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது அட்டைகள் குழந்தையின் உடலில் ஒட்டிக் கொண்டுள்ளது. உடல் வெளிப்புறத்தில் இருந்த அட்டைகளை நீக்கினாலும், குழந்தையின் பிறப்புறுப்பு வழியாக உள்நுழைந்த அட்டையை அறுவை சிகிச்சை மூலமே நீக்கியுள்ளனர்.

வெளியே எடுக்கப்பட்ட அந்த அட்டையின் நீளம் 10 செ.மீ என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறுவைச்சிகிச்சை குறித்த விவரங்கள் NCBI தளத்தில் டிசம்பர் 2011-ல் பதிவிடப்படுள்ளது. இதில் இருந்து இரு படங்களை எடுத்து பயன்படுத்தியுள்ளனர்.

இறந்த குழந்தையின் உடல் :

இறந்த குழந்தையின் உடல் மற்றும் அக்குழந்தை உயிருடன் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் பற்றி தேடுகையில், அது இரண்டும் வெவ்வேறு குழந்தையின் படங்கள். இறந்த குழந்தையின் புகைப்படம் பற்றி விவரங்கள் தெரியவில்லை.

எனினும், மற்றொரு புகைப்படத்தில் குழந்தையுடன் இருப்பவரின் புகைப்படம் திருமணத்திற்கான Vivaah.com தளத்தில் உள்ளது. அங்கிருந்து புகைப்படம் வெளியாகி இருக்கலாம்.

டைரி மில்க் சாக்லேட் :

சாக்லேட்களில் புழுக்கள் இருப்பதாக காண்பிக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இது உண்மையே. சாக்லேட்களில் சிறு சிறு புழுக்கள் இருப்பதாக பலமுறை செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள Cadbury சாக்லேட் கவரில் சீன மொழியில் எழுத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே படங்கள் வேறு வதந்தி :

டைரி மில்க் சாக்லேட் உடன் காண்பிக்கப்பட்ட படங்களுடன் கங்குல் கீரையில் புழு இருந்து அதை உண்டதால் குழந்தை இறந்து விட்டதாக TamilCNN என்ற இணையதளத்தில் தவறான செய்தியைப் பதிவிட்டு உள்ளனர்.

இதே போன்று Cadbury சாக்லேட்களில் எய்ட்ஸ் நோயாளியின் இரத்தம் கலந்து விட்டதாக வதந்தி பரவி இருந்தது.

அதைப் பற்றி படிக்க :  Cadbury தயாரிப்புகளில் HIV நோயாளியின் இரத்தம் கலந்ததா ?

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader