இந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் நிலை எனத் தவறான தரவுகளை வெளியிட்ட அண்ணாமலை !

பரவிய செய்தி

Current prices இன் படி, 2013-14 இல் தமிழ்நாட்டின் தனிநபர் NSDP ₹ 1,16,960 ஆகவும், 2022-23 இல் ₹ 2,75,583 ஆகவும் இருந்தது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு இதன் CAGR சதவீதம் 8.94% ஆக உள்ளது. இதே போன்று Current prices இன் படி, 2013-14 இல் தேசிய அளவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per Capita) ₹ 74,920 ஆகவும், 2022-23ல் ₹ 1,96,983 ஆகவும் உள்ளது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு இதன் CAGR சதவீதம் 10.15% ஆக உள்ளது. இதிலிருந்து, தேசிய அளவில் தனிநபர் CAGR TN ஐ விட 1.21% அதிகமாக உள்ளது. – தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் பிப்ரவரி 28 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்கு நிகரான வேகத்தில் தமிழ்நாடும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் எனது லட்சியம் என்று கூறியிருந்தார்.

அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் பதில்:

தமிழ் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன், தனது X பக்கத்தில் இதற்கு பதிலளித்து எழுதியுள்ள பதிவில், இந்தியாவின் தனிநபர் வருமானம் (GDP Per Capita) கடந்த பத்து ஆண்டுகளில் 4.43% CAGR வேகத்தில் வளர்ந்தது. இதுவே, ​​தமிழ் நாட்டின் NSDP அடிப்படையிலான தனிநபர் வருமானம் (NSDP Per Capita) 5.54% CAGR வேகத்தில்  வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று கூறியிருந்தார்.

CAGR என்றால் என்ன?

CAGR என்பது Compounded Annual Growth Rate ஆகும். சராசரியாக ஓராண்டில் பெரும் வளர்ச்சி எவ்வளவு என்று அறிய உதவுவது தான் இந்த CAGR கணக்கு. இதற்கென்று தனி Formulaவும் உள்ளது.

 

PTRக்கு அண்ணாமலையின் பதில்:

இந்நிலையில் X தளத்தில் அமைச்சரின் பதிவுக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை; 2013-14 இல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம்  (NSDP Per Capita) ₹ 1,16,960 (Current prices) ஆகவும், 2022-23 இல் ₹ 2,75,583 ஆகவும் இருந்தது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு இதன் CAGR சதவீதம் 8.94% ஆக உள்ளது; இதே போன்று Current prices இன் படி, 2013-14 இல் தேசிய அளவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per Capita) ₹74,920 ஆகவும், 2022-23ல் ₹ 1,96,983 ஆகவும் உள்ளது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு இதன் CAGR சதவீதம் 10.15% ஆக உள்ளது. இதிலிருந்து,  தமிழ் நாட்டின் வளர்ச்சி வேகத்தை விட இந்தியாவின் வளர்ச்சி 1.21% அதிகமாக உள்ளது என்பது தெளிவாகிறது என்று தனது X பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Archive Link

மேலும் இது குறித்த மற்றொரு பதிவிலும், “2013-14 & 2022-23 க்கு இடையில், Constant prices இன் படி, தமிழ்நாட்டின் தனிநபர் NSDP 63% ஆகவும், கர்நாடகா 73% ஆகவும், குஜராத் 66% ஆகவும் வளர்ந்துள்ளது (குஜராத்திற்கு 2013-14 முதல் 2021-22 வரை கணக்கிட்டாலும், தமிழ்நாட்டை விட அதிகமாக உள்ளது). இதே போன்று 2013-14 & 2022-23 க்கு இடையில், Constant prices இன் படி தமிழ்நாட்டின் GSDP 70% ஆகவும், கர்நாடகா 88% ஆகவும், குஜராத் 86% ஆகவும் வளர்ந்துள்ளது (குஜராத்திற்கு 2013-14 முதல் 2021-22 வரை கணக்கிட்டாலும், தமிழ்நாட்டை விட அதிகமாக உள்ளது) என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive Link

உண்மை என்ன?

அண்ணாமலை கூறிய செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் பின்வரும் உண்மைகளை கண்டறிய முடிந்தது.

தவறு 1:

  • Current prices இன் படி, 2013-14 இல் தேசிய அளவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per Capita) ₹ 74,920 என்று அண்ணாமலை தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார். RBI தரவுகளின் படி, 2013-14 இல் தேசிய அளவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per Capita)  89,796 ரூபாயாகும். இதனை ₹ 74,920 என்று அண்ணாமலை தவறாக குறிப்பிட்டுள்ளார்.

தவறு 2:

மேலும் Current pricesல், 2013-14 இல் தமிழ்நாட்டின் NSDP Per Capita ₹ 1,16,960 ஆகவும், 2022-23 இல் ₹ 2,75,583 ஆகவும் இருந்தது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு இதன் CAGR சதவீதம் 8.94% ஆக உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2013-2014 ஐ அடிப்படை ஆண்டாக (Base Year) வைத்துகொண்டால், 2022-2023 ஆம் நிதியாண்டு வரை 9 ஆண்டுகளே உள்ளன. பத்து ஆண்டுகள் அல்ல. அண்ணாமலை கொடுத்துள்ள Compound Annual Growth Rate தவறாகும். எனவே, கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் NSDP Per Capita ஆண்டுக்கு சராசரியாக 9.99% என்கிற வேகத்தில் வளர்ந்துள்ளது. 

இதே போன்று, 2013-14 முதல் 2022-23 வரை 9 ஆண்டுகளுக்கு இந்தியாவின் GDP per Capita (at Current Prices) சராசரியாக ஆண்டுக்கு  9.12 % என்கிற வேகத்தில்  வளர்ந்துள்ளது. எனவே தமிழ்நாட்டை விட இந்தியா 1.21% வேகமாக வளர்ந்துள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டது தவறு.  

 

GDP vs NDP:

GDP: ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் ஏற்பட்ட மொத்த சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு.

GSDP: ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மாநிலத்தில் ஏற்பட்ட மொத்த சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு.

இதிலிருந்து Depreciation என்னும் தேய்மானங்கள் கழித்தப் பிறகு கிடைப்பது NDP மற்றும் NSDP ஆகும். எனவே GDP/GSDP யை விட NDP/NSDP குறைவாகவே இருக்கும். அதன் அடிப்படையில், GDP/GSDP Per Capitaவை விட NDP/NSDP Per Capitaவின் மதிப்பும் குறைவாக இருக்கும். இந்நிலையில், தமிழ் நாட்டிற்கு NSDP Per Capita’வையும் இந்தியாவிற்கு  GDP Per Capitaவையும் வைத்துக் கணக்கிட்டால் கூட, தமிழ் நாடு இந்தியாவை விட அதிகமாகவும் வேகமாகவும் வளர்ச்சியடைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 

Total Fertility Rate (TFR):

ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் சராசரியாக ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றனர் என்கிற விகிதத்தை Total Fertility Rate என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் குழந்தைப் பிறப்பு விகிதம் (TFR) 1.4 ஆக குறைந்துள்ளது. இதற்கு போதைப்பொருள் மற்றும் மது தமிழ்நாட்டில் அதிகமாக ஊடுருவியுள்ளது தான் காரணம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால், சீனாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.4 ஐ விடவும் குறைவு.

இதே போன்று தான் தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதமும் 0.72 ஆக உள்ளது. உலகெங்கிலும் பல நாடுகளிலும் கூட குழந்தைப் பிறப்பு விகிதம் 1.4 ஐ விட குறைவாகவே உள்ளது. அவ்வாறிருக்கும் அனைத்து நாடுகளிலும் போதைப்பொருள் மற்றும் மது பயன்பாடு அதிகமாக உள்ளதால் தான் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று கூற முடியுமா?

பொதுவாக ஒரு மாநிலமோ அல்லது ஒரு நாடோ எப்போது குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும் என்றால்; எங்கெல்லாம் வளர்ச்சி அதிகமாக இருக்கிறதோ, எங்கெல்லாம் பெண்கள் கல்வியில் முன்னேறி இருக்கிறார்களோ, எங்கெல்லாம் வேலைவாய்ப்பில் பெண்களும் முன்னிலையில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இயல்பாகவே குழந்தைப் பிறப்பு விகிதம் குறையும். உதாரணமாக உயர்கல்வியில் (GER சதவீதத்தில்) இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது.

₹9 லட்சம் கோடி கடன்:

திமுக ஆட்சியில் வளர்ந்தது தமிழ் நாட்டின் கடன் சுமை மட்டுமே என்றும் தமிழ் நாட்டின் மொத்த நிலுவைக் கடன் ₹9 லட்சம் கோடியாக உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து தேடியதில், 2023-24க்கான பட்ஜெட் உரையில் மார்ச் 31, 2024ல் தமிழ்நாட்டின் மொத்த நிலுவைக்கடன் ரூ.7,26,028.83 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதே போன்று, 2024-25க்கான பட்ஜெட் உரையில்  மார்ச் 31, 2025ல் தமிழ்நாட்டின் மொத்த நிளுவைக்கடன் கடன் ரூ.8,33,361.80 கோடியாக இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் எங்குமே தமிழ்நாட்டின் கடன் ₹ 9 லட்சம் கோடியாக இருக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இவை வெறும் Estimateகள் தான். உண்மையான நிலவரம் உண்மையான நிலவரம் வரும் காலங்களில் தான் தெரியவரும்.

இதே போன்று இந்திய அளவில் கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி கடந்த மார்ச் 31, 2014 இன் போது ரூ. 55,87,149.33 கோடியாக இருந்த இந்தியாவின் கடன், மார்ச் 31, 2024 இன் போது ரூ. 168,72,554.16 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் கடன் 3.01 மடங்காக அதிகரித்துள்ளதையும் காண முடிகிறது.

மேலும், மொத்த பொருளாதார உற்பத்தியில் (GDP) எவ்வளவு விழுக்காடு கடன் உள்ளது (Debt to GDP Ratio) என்பது தான்  சரியான நிதிநிலையை எடுத்துக்காட்டும். அந்த வகையில், தமிழ் நாட்டின் மொத்த நிலுவைக்கடன் தமிழ் நாட்டின் பொருளாதார மதிப்பில் 26.69% சதவிகிதமே உள்ளது. ஒன்றிய அரசின் நிலுவைக்கடன் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பில் 57.8% ஆக உள்ளது. இது மாநிலங்களின் கடன் நீங்கலாக  இருக்கும் கடன் அளவு. மாநிலங்களின் கடனும் சேர்த்தால் இந்தியாவின் கடன் 81.6% ஆக உள்ளது.

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் உயர்ந்துள்ளது என்று சமூக ஊடகங்களில் இதற்கு முன்பும் பல செய்திகள் வைரலாகப் பரவியது. அப்போதே இது குறித்து கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

மேலும் படிக்க: அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அதிக கடன் வாங்கப்படுகிறதா?

அண்ணாமலை கூறியதில் சரியானவை:

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்து அண்ணாமலை குறிப்பிட்டிருந்த தரவுகளை ஆய்வு செய்து பார்த்ததில், ஊரகப் பகுதிகளில் 2022-23 இல் தமிழ்நாட்டில் 1000 நபர்களில் 38 நபர்களும், நகர்ப்புறங்களில் 1000 நபர்களில் 51 நபர்களும் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டிருந்த தரவுகள் சரியானதே என்பதை அறிய முடிந்தது.  

 

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader