கலிபோர்னியாவில் ராசு வன்னியர் சாலை என பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளதா ?

பரவிய செய்தி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரின் அருகே, புலம்பெயர் தமிழர் திரு ராசு வன்னியர் அவர்களின் பெயரை ஒரு வதிவிடத்திற்கு சூட்டியுள்ளது கலிபோர்னியா மாகாண அரசு. ராசு வன்னியர் ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரின் அருகே உள்ள ஒரு பகுதிக்கு புலம்பெயர் தமிழர் திரு.ராசு வன்னியர் என்பவரின் பெயரை கலிபோர்னியா மாகாண அரசு சூட்டியுள்ளதாக நெடுஞ்சாலையின் பெயர் பலகை ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழிலதிபரான ராசு வன்னியர் 2008-ல் ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சியின் போது தன் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் இதர கலிபோர்னியா நிறுவனங்களின் தயாரிப்புகளை தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு விற்று அந்த மாகாணத்தின் பொருளாதாரத்தை வலுப்பெற செய்த காரணத்தினால் அவரின் பெயரை கலிபோர்னியா மாகாண அரசு சூட்டியுள்ளதாக இப்புகைப்படத்துடன் 2017-ல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?

புலம்பெயர்ந்த ஒரு தமிழரின் பெயரை கலிபோர்னியாவில் உள்ள பகுதிக்கு வைத்து இருந்தாலோ அல்லது அந்த நாட்டின் பொருளாதரத்திற்கு உதவி புரிந்து இருந்தாலோ செய்திகள் பலவற்றில் இடம்பெற்று இருப்பார். ஆனால், ராசு வன்னியர் என்பவர் பற்றி என்ற தகவலும் வெளியாகவில்லை.

Facebook link 

ஆகையால், வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015-ல் Wings Cartage Inc எனும் முகநூல் பக்கத்தில் நெடுஞ்சாலை நடுவே வைக்கப்பட்டு உள்ள பெயர் பலகையின் புகைப்படத்தை பதிவிட்ட பதிவு கிடைத்தது. ஆனால், அதில் ராசு வன்னியர் என்பதற்கு பதிலாக கலிபோர்னியாவின் தலைநகரான சேக்ரமெண்டோ என இடம்பெற்று இருக்கிறது. 

முடிவு : 

நம் தேடலில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரின் அருகே ஓர் வசிப்பிடத்திற்கு புலம்பெயர் தமிழர் ராசு வன்னியர் என்பவரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக பரவும் பெயர் பலகையின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button