This article is from Sep 16, 2019

ஆபத்தானவை என கேம்ஸ்கேனர் செயலியை கூகுள் ப்ளேஸ்டோர் நீக்கியதா ?

பரவிய செய்தி

கேம்ஸ்கேனர்(Camscanner) என்றழைக்கப்படும் செயலியைக் கடந்த சில வாரத்திற்கு முன்பு கூகுள் நிறுவனம் டேஞ்சரஸ் ஆப்ஸ்(Dangerous Apps) பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த Camscanner செயலியை இதுவரை 1 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அப்படி நீங்களும் இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வந்தால் உடனே அதனை உங்கள் போனில் இருந்து அன்-இன்ஸ்டால்(Uninstall) செய்து விடுங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

கேம்ஸ்கேனர்(Camscanner) எனும் செயலி 2010-ம் ஆண்டு ஷாங்காயை மையமாகக் கொண்ட சிசி இன்டெலிஜென்ஸ் மூலம் ப்ளேஸ்டோரில் வெளியிடப்பட்டது. தற்பொழுது கேம்ஸ்கேனர் செயலியை 100 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதை ப்ளேஸ்டோரில் பார்க்கும் பொழுது தெரிந்து கொள்ள முடிந்தது.

கேம்ஸ்கேனர் செயலி நீக்கம் :

ஆவணங்களை ஸ்கேனிங் செய்ய, ஆண்ட்ராய்டு பிடிஎஃப் உருவாக்கம் செயலியான கேம்ஸ்கேனர் ஆனது மால்வர் உடன் இருப்பதை பல சீன ஸ்மார்ட்போன்களில் கண்டறியப்பட்டு உள்ளதாக 28 ஆகஸ்ட் 2019-ல் வெளியான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களின் அப்ளிகேஷன் ஸ்கேனிங் பயன்பாட்டிற்கு இலவசமாக மற்றும் பணம் செலுத்தும் வெர்சன்களில் விளம்பரங்கள் இல்லாமல் இருந்தன. தொடக்கத்தில், இந்த நிறுவனம் கேம்ஸ்கேனரில் இருந்து விளம்பரங்கள் மற்றும் செயலியை பணம் கொடுத்து வாங்குவதன் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளனர்.

இருப்பினும், Kaspersky-ன் புதிய அறிக்கையின் படி, கேம்ஸ்கேனர் செயலின் புதிய வெர்சனில் புதிய விளம்பர லைப்ரரியானது ஆண்ட்ராய்டு போன்களில் மால்வர்களை வழங்கும் ட்ரோஜன்களை கொண்டிருப்பதாக தெரிவித்து இருந்தது.

Kaspersky மால்வர் குறித்து கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பிய அறிக்கையின்படி, கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து CamScanner செயலி நீக்கப்பட்டு உள்ளதாக இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது. எனினும், கூகுள் ப்ளேஸ்டோரில் CamScanner செயலி உடைய ஓல்ட் வெர்சன் மற்றும் பதிவு இல்லாத செயலிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், CamScanner செயலி உங்களின் செல்போனில் இருந்தால் அதனை நீக்கவும் அறிவுறுத்தி செய்திகள் வெளியாகி இருக்கிறது.

CamScanner செயலி :

CamScanner செயலி தரப்பில் செயலியில் இருந்த பிரச்சனைகள் குறித்து விசாரணை மேற்கொள்வதாக முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தன.

ஆகஸ்ட் 4-ம் தேதி CamScanner செயலியில் இருந்த பிரச்சனைகளில் சரி செய்து மீண்டும் கூகுள் ப்ளேஸ்டோரில் வந்து இருப்பதாகவும், VERSION 5.12.5-க்கு மாற்றிக்கொள்ள அறிவுறுத்தி CamScanner தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.

CamScanner செயலி தற்பொழுது கூகுள் ப்ளேஸ்டோரில் வெளியாகி இருக்கிறது என்பது உண்மையே.

முடிவு :

நம்முடைய தேடலில், CamScanner செயலின் விளம்பர லைப்ரரியில் ஆண்ட்ராய்டு செல்போன்களுக்கு மால்வர்களை பரப்பும் ஆபத்து இருப்பதாக Kaspersky அறிக்கை வெளியிட்டு கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கி, அன்-இன்ஸ்டால் செய்ய சொன்னது உண்மையே.

ஆனால், CamScanner செயலி பரவும் செய்தியில் கூறுவது போன்று 1 மில்லியன் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்படவில்லை. 100 மில்லியன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது CamScanner செயலி மீண்டும் கூகுள் ப்ளேஸ்டோரில் வெளியாகி இருப்பதாக அந்நிறுவனம் சமூக வலைதளங்கள் மூலம் கூறி வருகிறது. எவ்வாறாயினும், CamScanner செயலியை பயன்படுத்துவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். பாதுகாப்பானவை என அறிந்தால் மட்டுமே உங்களின் தகவல்களை பெறும் செயலிகளை பயன்டுத்துங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader