This article is from May 13, 2018

கனடாவின் அமைச்சரவை பற்றி அறிவீர்களா!

பரவிய செய்தி

கனடா நாட்டின் அமைச்சரவையில் இருக்கும் எம்.பிக்கள் அனைவரும் அந்தந்த துறைகளில் படித்தவர்கள் அல்லது பணி அனுபவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற அமைச்சரவை இருக்கப்போவதில்லை.

மதிப்பீடு

சுருக்கம்

கனடா அமைச்சர்கள் அனைவரும் அவர்கள் வகிக்கும் பதவி சார்ந்த துறையில் அனுபவம் உள்ளவர்கள். விவசாயத் துறை பதவியை முன்னாள் விவசாயி வகிப்பது போன்றவை சிறப்பு.

விளக்கம்

கனடா நாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி அக்டோபர் 19, 2015-ம் ஆண்டில் பெருவாரியான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. கனடா நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற ஜஸ்டின் ட்ரூடோ  அமைச்சரவையில் இருக்கும் நபர்களை தேர்ந்தெடுத்துள்ள விதம் ஆச்சரியமாக உள்ளது.

அமைச்சர் பதவி வகிப்பவர் அந்த துறை சார்ந்த அனுபவம் உள்ளவரா என்று பார்த்து தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். கனடாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தகுதி என்ன என்பது பற்றி ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. இதுபோன்ற அமைச்சரவை இருந்தால் நாட்டின் வளர்ச்சி பாதை பிரகாசமாக இருக்கும் என்று கூறிக் கொண்டு வருகின்றனர். அமைச்சர்கள் அனைவரும் அவர்கள் வகிக்கும் பதவி சார்ந்த துறையில் படித்து, அனுபவம் உள்ளவர்களாக திகழ்கின்றனர். ஜஸ்டின் அமைச்சரவையில் இருப்பவர்கள் பற்றிய மீமில் கூறியது பற்றியும், அவர்களின் முழு விவரங்களையும் தொடர்ந்து பார்ப்போம்.

சுகாதாரத்துறை அமைச்சகம் :

கனடாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு மருத்துவர் இல்லையென்றாலும் அதன் சார்ந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர். கனடாவின் சுகாதாரத்துறை அமைச்சர் Petitpas Taylor ஆவார். இவர் சமூக பணி சார்ந்த துறையில் இளங்கலைப் பட்டம்(B.A) பெற்றவர். மேலும், சுகாதார சங்கம் மற்றும் ஆலோசகராக சேவை செய்தவர்.கனடியன் மெண்டல் ஹெல்த் அசோஸியனின் தற்கொலை தடுப்பு குழுவில் பங்கு வகித்தவர்

போக்குவரத்துத்துறை அமைச்சகம் :

Marc Garneau கனடாவின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் விண்வெளி வீரர் என்பது உண்மை. தனது வாழ்கையை கனடா கப்பல் துறையில் தொடங்கி பின்னர் விண்வெளி வீரர் மற்றும் கனடா ஸ்பேஸ் ஏஜென்சிஸின் தலைவராக இருந்தவர்.

தேசிய பாதுகாப்பு அமைச்சகம் :

கனடாவின் Minister of National Defence பதவியை வகிப்பவர் ஹர்ஜீத் சிங் சஜ்ஜன் என்ற சீக்கியர் ஆவார். இவர் கனடாவின் ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் நவ்தீப் சிங் பேயின்ஸ் ford motor நிறுவனத்தில் பல ஆண்டுகள் Accounting and Financial analyst ஆக பணியாற்றியவர். நிதி அமைச்சராக இருக்கும் William Francis Morneau 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் ஆவார்.

மினிஸ்ட்ரி ஆஃப் யூத் :

இளைஞர்களுக்கான துறையில் 45 வயதுக்குட்டபட்டவர்  அமைச்சராக உள்ளார் என்று கூறியுள்ளனர். மினிஸ்ட்ரி ஆஃப் யூத் என்ற துறையை பிரதமர் ஜஸ்டின் கீழ் உள்ளது. அவரின் வயது 46 ஆகும்.

விவசாயத்துறை :

மக்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் அனைவராலும் மதிக்கப்படும் தொழிலான விவசாயத்துறையில் ஒரு விவசாயி வகிக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம் அது கனடாவில் சாத்தியமாகியுள்ளது. கனடாவின்Agriculture and agri-food அமைச்சர் Lawrence MacAulay  முன்னாள் விவசாயி மற்றும் தொழிலதிபர் ஆவார்.

மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் :

Public safety and Emergency preparedness அமைச்சரான Ralph Edward Goodale ஒரு Scout மாணவர் என்று கூறியுள்ளனர். ஆம், அவர் கனடாவின் Scouts-ல் உறுப்பினர் மட்டுமின்றி அதில் சிறந்து விளங்கியவரும் கூட. மேலும், தொழில், விவசாயம், சட்டம் மற்றும் ஒளிபரப்பு போன்ற துறைகளில் அனுபவம் மிக்கவர். நீண்டகால அரசியலில் ஈடுபடும் Ralph 2003-ல் நிதி அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் ட்ரூடோ : கனடாவின் பிரதமரான ஜஸ்டின் பிரதமர் பதவி மட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவுத்துறை மற்றும் மினிஸ்ட்ரி ஆஃப் யூத் துறைகளை வைத்துள்ளார். ஜஸ்டின் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆதரவாக வாதாடும் வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். கனடாவில் முதல் முறையாக வழக்கறிஞர் பிரதமர் பதவியை வகித்துள்ளார் என்ற பெருமையை உடையவர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பார்வை மாற்றுத்திறனாளி என்று கூறியுள்ளனர். ஆனால், முன்பு இருந்த அமைச்சரே நடமாட முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். Kristy Duncan விளையாட்டுத்துறை மற்றும் அறிவியல் துறை அமைச்சராக உள்ளார்.

கடல் வளம், மீன் வளத்துறை அமைச்சர் Dominic LeBlanc ஒரு Inuit  ( புராதானமானவர்)ஆவார். இவர் non-medical use of drugs and standing committee on fisheries and ocean உள்ளிட்டவற்றில் அனுபவம் மற்றும் ஆர்வம் கொண்டவர். கனடாவின் Ministry of Science  அமைச்சர் Phd பட்டம் பெற்ற Medical Geographer ஆவார். கனடாவின் குடியேற்றம், குடி உரிமை மற்றும் அகதிகள் துறை அமைச்சரான அஹ்மத் ஹுசேன் வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் தலைமைப்பண்பு மற்றும் மக்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற செயல்களில் சாதனை புரிந்தவர். சோமாலியாவில் பிறந்து வளர்ந்து பின் அகதியாய் கனடாவிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நாடாளுமன்றத்தில் விஞ்ஞானிக்கள் கூட எம்பிக்கள் ஆக உள்ளனர் என்றும், விஞ்ஞானிக்களில் 50% பேர் பெண்கள் என்று கூறினர். இது முழுவதும் சரி அல்ல. 54 பெண்கள் மற்றும் 223 ஆண் விஞ்ஞானிகள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கனடா நாட்டின் அமைச்சரவை தேர்வானது சிறந்த முறையில் அமைந்துள்ளது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader