கனடா நாட்டின் தேசியக் கீதத்தை தமிழில் பாடியுள்ளார்களா ?

பரவிய செய்தி
கனடா நாட்டின் 150வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக அந்நாட்டின் தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் பாடியுள்ளனர் .
மதிப்பீடு
சுருக்கம்
தமிழ் மட்டும் அல்லாமல் அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் தேசியக் கீதத்தைப் பாடியுள்ளனர்.
விளக்கம்
2017 ஆம் ஆண்டில் கனடாவின் 150வது சுதந்திர தினத்தை கொண்டாடிய டொராண்டோ சிம்பொனி இசைக்குழு அந்நாட்டின் தேசியக் கீதத்தை நாட்டில் பேசப்படும் 12 மொழிகளில் பதிவு செய்துள்ளது . கனேடிய தேசியக் கீதம் அரபு , அமெரிக்க சைன் மொழி , க்ரீ , ஆங்கிலம் , பிரெஞ்சு , ஜெர்மன் , இத்தாலியன் , பஞ்சாபி , மாண்டரியன் , ஸ்பானிஷ் , தகலாக் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நிகழ்த்தப்பட்டன .
பல்வேறு பதிப்புகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன . இது அனைத்தையும் உள்ளாகியது மற்றும் படைப்பாற்றல் , பன்முகத்தன்மை பற்றியது என்று டி.எஸ்.ஓ பொது உறவுகளின் இயக்குனர் பிரான்சிஸ் லேபிள் கூறியுள்ளார் .
கனடா நாட்டில் 150வது சுதந்திர தினத்திற்காக 12 மொழிகளில் பதிவு செய்யப்பட்ட பாடல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தின் கடற்க்கரையிலும் இசைக்குழுக்கள் உடன் இணைத்து நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் . 70 இசைக் கலைஞர்களை கொண்ட இசைக்குழு 12 பதிப்புகள் ஒவ்வொன்றிற்க்கும் இசையமைத்து , இசையுடன் நடித்தும் உள்ளனர் . இதில், தமிழ் பாடலை சுபா சங்கரன் என்பவர் பாடியுள்ளார்.
இந்தியாவில் பேசப்படும் இரு மொழிகளில் கனடாவின் தேசியக் கீதம் பாடப்பட்டுள்ளது என்பது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை . கனடா நாட்டில் தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 4 லட்சம் அளவிற்கு குறைவாக இருந்தாலும் , தமிழ் மொழியை கௌரவித்துள்ளது .
அந்நாட்டின் அதிபர் தமிழர்களின் தைத் திருநாள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தது நாம் அனைவரும் அறிந்ததே . இவ்வாறு உலகின் பல இடங்களில் தமிழ் மொழிக்கான மரியாதை கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது .