பொங்கலுக்காக தாடி வைத்த கனடா பிரதமர்| கிண்டலுக்கு அளவில்லையா ?

பரவிய செய்தி
பச்சை தமிழனாக மாறிய கனடா பிரதமர். பெருமை கொள் தமிழா ! பொங்கல் கொண்டாட மீசை, தாடி வைத்துத் தயாராகும் கனடா பிரதமர். தமிழர் திருநாள்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ் சமூக வலைதளவாசிகளுக்கும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோக்கும் அப்படியொரு பொருத்தம் எனக் கூறலாம். அவரை கன்டென்ட் ஆக்கி வைரல் செய்த ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன.
கனடா நாட்டில் வசிக்கும் அனைத்து சமூக மக்களுடன் ஒன்றாக இணைந்து பண்டிகை, நிகழ்ச்சிகளை கொண்டாடும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கூடுதலாகவே தமிழ் சமூகத்துடன் இணைக்கப்பட்டு மீம்ஸ் பரவுவது உண்டு. அவற்றில் பெரும்பாலும் நையாண்டி பதிவாக உள்ளன.
Ce matin, @HarjitSajjan et moi avons discuté des développements en Irak avec le @CDS_Canada_CEMD et la @DMDND_SMMDN. La sécurité des Canadiens dans la région est notre priorité absolue. Nous continuerons de suivre la situation de près et d’encourager la désescalade. pic.twitter.com/TIIXYFg9Y6
— Justin Trudeau (@JustinTrudeau) January 6, 2020
சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தாடி, மீசையில் இருக்கும் புகைப்படங்கள் ஜனவரி 6-ம் தேதி அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படங்களை வைத்து ” பொங்கல் பண்டிகைக்காக ” தாடி, மீசை வைத்த கனடா பிரதமர், பச்சை தமிழனாக மாறிய கனடா பிரதமர் என முகநூலில் மீம்ஸ் பதிவிட ஆரம்பித்து உள்ளனர். இது குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்டு வருகின்றனர்.
ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய குளிர்கால விடுமுறைக்கு பிறகு பணிக்கு திரும்பிய பொழுது தாடி மற்றும் மீசையுடன் இருக்கும் தோற்றத்தில் இருந்து வருகிறார். இதுநாள் வரையில் கிளீன் ஷேவ் தோற்றத்தில் பார்த்து பழகிய ஜஸ்டின் ட்ரூடோவை, சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைலில் பார்த்தது சர்வதேச அளவில் முக்கிய செய்தியாகவே வெளியாகி இருக்கிறது. இதனால் அவர் வளர்ந்து வரும் அரசியல் வாதிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளதாக செய்திகளில் குறிப்பிட்டு உள்ளனர்.
ட்ரூடோ லிபரல் தலைவராகவும், பிரதமர் ஆவதற்கு முன்பாக மூவ்ம்பர் புரோஸ்டேட் கேன்சர் டிரஸ்ட்-க்காக மீசை மற்றும் தாடியை வளர்ந்து இருந்ததாக பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது. கனடா அரசியலில் முதன்மை தலைவர் தாடியுடன் இருப்பதும், ட்ரூடோ தாடியுடன் இருப்பதும் முதல் முறை அல்ல. உலக அரசியலில் முக்கிய தலைவர்கள் தாடியுடன் இருப்பதை அரிதாகவே பார்க்கின்றனர்.
கனடா பிரதமர் பொங்கல் பண்டிகைக்காக தாடி மற்றும் மீசை வைத்து இருப்பதாக கூறி பரவுவது நையாண்டி பதிவுகளே. எனினும், அவரின் புகைப்படங்களை சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.