கனடா பிரதமர் கையில் “இந்தி தெரியாது போடா” டி-ஷர்ட் இருப்பதாக ஃபோட்டோஷாப்| நையாண்டிப் பதிவு !

பரவிய செய்தி
தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஓர் பிரச்சனை என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் – கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி
மதிப்பீடு
விளக்கம்
இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் “இந்தி தெரியாது போடா” எனும் வாசகம் ட்ரெண்ட் செய்யபட்டது. அந்த வாசகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்கள் ட்ரெண்ட் ஆகியதால் இந்தி தெரியாது போடா மற்றும் ஐ அம் தமிழ் பேசும் இந்தியன் ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகளில் வெளியாகியது.
இந்நிலையில், ” இந்தி தெரியாது போடா ” எனும் வாசகம் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும் டி-ஷர்ட் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கையில் இருப்பது போன்ற புகைப்படம் மீம்ஸ் ஆக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தின் உண்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது.
ஏதாவது பிரச்சனை அல்லது போராட்டம் என்றால் கனேடியன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போன்று ஃபோட்டோ செய்யப்பட்டவை அல்லது நையாண்டி பதிவுகள் ஏராளமாய் வருவதுண்டு. இப்புகைப்படமும் அவற்றில் ஒன்று தான். ஆனால், இதையறிமால் பலரும் கமெண்ட்களில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
Vaccines are safe, and save lives. Love this shirt, thanks @GinettePT! #VaccinesCauseAdults pic.twitter.com/7TluU4E6VL
— Justin Trudeau (@JustinTrudeau) May 30, 2019
இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேர்ஜ் சேர்ச் செய்கையில், 2019-ம் ஆண்டு மே 30-ம் தேதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தடுப்பூசிக்கு ஆதரவாக ஓர் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில், ” vaccines cause adults ” பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் கையில் இருப்பதை காணலாம். புகைப்படத்தில் உடன் இருப்பவர் கனடா எம்பி கினெட்டே பெடிட்பஸ் டெய்லர்.
மேலும் படிக்க : பொங்கலுக்காக தாடி வைத்த கனடா பிரதமர்| கிண்டலுக்கு அளவில்லையா ?
தடுப்பூசிக்கு ஆதரவாக வெளியிட்ட பதிவில் இடம்பெற்ற ட்-ஷ்ர்ட் புகைப்படத்தில் ஃபோட்டோஷாப் செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பாக, பலமுறை கனடா பிரதமரை தமிழர்களுடன் தொடர்புப்படுத்தி பல நையாண்டிக் கதைகள், பதிவுகள் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும் !