This article is from Apr 01, 2019

கால்வாய் பணிக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரமா ?

பரவிய செய்தி

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நதிநீர் இணைப்பிக்காக உருவான இயந்திரம். நதிநீர் இணைப்பு கால்வாய்களை அமைப்பதற்காக முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 3 முதல் 5 கிலோ மீட்டர் வரை கால்வாய் பணியை முடிக்க முடியும்.

மதிப்பீடு

சுருக்கம்

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் என கூறுபவை அமெரிக்கச் சேர்ந்த Gomaco நிறுவனத்திற்கு சொந்தமானவை. இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல.

விளக்கம்

பிரதமர் மோடியின் ஆட்சியில் நதிநீர் இணைப்பிற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இயந்திரம் ஒரு நாளைக்கு 3 முதல் 5 கி.மீ தொலைவிற்கு கால்வாய் பணியை முடிப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

மத்தியில் ஆளும் ஆட்சியில் நதிநீர் இணைப்பிற்காக உருவாக்கப்பட்ட இயந்திரம் என பகிரப்படுபவை இந்தியாவைச் சேர்ந்தவையே அல்ல. அந்த படத்தில் உள்ள இயந்திரத்தில் Gomaco என எழுதப்பட்டு உள்ளது.

1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட GOMACO என்ற நிறுவனம் கட்டுமானப் பணிகளுக்காக இயந்திரங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் முக்கியமாக தண்ணீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும்.

5 கி.மீ வரை கால்வாய் பாதையை உருவாக்கும் என கூறிய இந்த இயந்திரம் ஒரு ” Full Canal Cross Section Finisher ” . கால்வாயில் கான்கிரீட் கலவையை செலுத்தி முழுமையாக முடித்து வைக்கிறது.

Gomaco நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் பல நாடுகளில் கட்டுமானப் பணிகளுக்காக கட்டுமான நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கால்வாய் அமைக்கும் இயந்திரங்கள் கீழே.

அயல்நாட்டு நிறுவனம் தயாரித்த இயந்திரத்தை இந்தியாவில் மேக்இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் என தவறான தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader