உலகின் ஒரேயொரு கார்பன் நெகட்டிவ் தேசம் பூடான் | அங்கு பிரச்சனைகளே இல்லையா ?

பரவிய செய்தி

உலகிலேயே தண்ணீர் பிரச்சனை, உணவு பிரச்சனை, காற்று மாசுபாடு அல்லது தண்ணீர் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளாத ஒரே நாடு பூடான் தேசமே. இன்னும் சொல்ல போனால் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவதை விட அதிக அளவு உள்ளிழுக்கும் உலகிலேயே கார்பன் நெகட்டிவ் தேசம் பூடான் மட்டுமே.

மதிப்பீடு

சுருக்கம்

பூடான் கார்பன் நெகட்டிவ் தேசமாக இருந்தாலும் தண்ணீர் பிரச்சனை, வறுமை உள்ளிட்ட பிரச்சனைகளை கடந்தே தற்பொழுது பசுமைமிகு நாடாக விளங்குகிறது. அதனை பற்றி விரிவாக காண்போம்.

விளக்கம்

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே அமைந்து இருக்கும் சிறிய நாடான பூடானின் மக்கள் தொகை 7,50,000 மட்டுமே.உலகிலேயே மிகவும் பசுமையான நாடாக தங்களை கருதுகின்றனர் பூடான் மக்கள்.

Advertisement

ஆகஸ்ட் 2-ம் தேதி The Knowledge factory என்ற முகநூல் பக்கத்தில் பூடான் தேசத்தின் சிறப்புகள் குறித்து மீம் பதிவு பதிவிடப்பட்டு இருந்தது. அதில், பூடான் தேசமானது தண்ணீர், உணவு, மாசுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளாத ஒரே தேசம் எனக் குறிப்பிட்டு இருந்தனர். அதனை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

தண்ணீர் பிரச்சனை :

அதிக அளவில் நீர் வளம் கொண்ட பூடான் தேசத்திலும் கூட தண்ணீர் நெருக்கடி ஏற்படுகிறது. சமீபகாலமாக தண்ணீர் பிரச்சனையும் அதிகரிக்கிறது. பூடானில் உள்ள Thimphu மற்றும் Phuentsholing ஆகிய பகுதிகளில் இப்பிரச்சனை அதிகம் நிலவுகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் குடிப்பதற்கும், நீர் பாசனத்திற்கு தண்ணீர் இல்லை.

பூடானில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் குழாய்களில் தண்ணீரானது குளிர்காலங்களில் உறைந்து விடுவதால் குழாய்கள் அடைத்துக் கொள்வதாகவும் அல்லது தேசமடைவதாகவும் ஜனவரி 2019-ல் business Bhutan என்ற தளத்தில் கூறப்பட்டுள்ளது. 2018-ல் RRA அறிக்கைப்படி, 34 சதவீதம் வீணாகும் தண்ணீரானது தண்ணீர் விநியோகம் நெட்வொர்க் மூலம் நிகழ்வதாகக் கூறப்படுகிறது தவறான முறையில் தண்ணீரை பெறுவது உள்ளிட்டவையும் காரணமாக கூறப்படுகிறது.

உணவு பிரச்சனை ?

Advertisement

அந்நாட்டின் உணவு பாதுகாப்பிற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Food Security and Agricultural Productivity Project (FSAPP) என்ற திட்டத்தை உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் உணவு இறக்குமதியை குறைக்கவும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதற்கு உதவ, விவசாய தயாரிப்புகளை அதிகரிக்கவும் முடியும் என நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

Asian Development Bank உடைய தரவுகளின் படி, பூடானில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 2012-ல் 12% ஆக இருந்தது. 2017-ல் அந்த எண்ணிக்கை 8.7% ஆக குறைந்துள்ளது.

மாசுபாடு :

நீர்நிலைகளில் இருக்கும் மாசுபாட்டை குறைக்க தன்னார்வ அமைப்புகள், மாணவர்கள் ஒன்றிணைந்து தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர். அந்நாட்டில் உள்ள மக்களும் பிற நாடுகளை போன்று நவீன வாழ்க்கைக்கு மாறி வருவதால் இ-வேஸ்ட் உள்ளிட்ட குப்பைகளும் அதிகரிக்கிறது. ஆகையால், clean bhutan எனும் திட்டத்தை தொடங்கி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.

நெகட்டிவ் கார்பன் :

உலகிலேயே நெகட்டிவ் கார்பன் கொண்ட தேசமாக பூடான் விளங்குகிறது. அந்த தேசத்தில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடை விட உள்ளிழுக்கப்படும் அளவு அதிகம். ஆகையால், கார்பன் அளவு நெகட்டிவில் செல்கிறது.

கார்பன் அளவை குறைப்பதற்கு 2009-ல் இருந்து பல புதிய கொள்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. காடுகளின் பகுதிகள் 60 சதவீதத்திற்கு கீழே செல்லக் கூடாது எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

காற்று மாசுபாட்டை விளைவிக்கும் வாகனங்களை தவிர்த்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். அரசு போக்குவரத்திற்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, ஹைட்ரொஎலெக்ட்ரிக் பவர் உற்பத்தி முறை கையாளப்படுகிறது.

கிராமப்புறங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் உணவு சமைப்பதற்கு விறகுகளை பயன்படுத்த தேவையில்லை.

முடிவு :

உலக நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கையில் பூடான் தேசத்தின் முக்கிய நோக்கம் மகிழ்ச்சிகரமான நாடாக இருக்க வேண்டும் என தீர்மானித்து உள்ளனர். பூடான் நெகடிவ் கார்பன் தேசம் என கூறுவது உண்மையே.

எனினும், தண்ணீர் விநியோக பிரச்சனை, நீர்நிலை மாசுபாடு, மக்கள் பயன்படுத்திய குப்பைகள் உள்ளிட்ட பிரச்சனைகளும் சிறிதாய் அங்குள்ளன. அதனை சரிசெய்ய அந்நாட்டு அரசாங்கமும், மக்களும் பல முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button