விளையாட்டுத்துறை அமைச்சர் வீரர்களுக்கு உணவு பரிமாறினாரா?

பரவிய செய்தி

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராதோர் ஆசிய போட்டிகளில் பங்கு பெற்ற இந்திய வீரர்களுக்கு தட்டில் உணவு பரிமாறும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு விளையாட்டு வீரரான அமைச்சர் மற்ற வீரர்களுக்கு உணவு பரிமாறியது பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ராஜ்யவர்தன் சிங் ராதோரின் படத்தை ட்விட்டரில் பதிவிட்ட பத்திரிகையாளர் மற்றும் 2008 ஒலிம்பிக் போட்டி வழிகாட்டியான திக்விஜய் சிங் டோ தன் ட்விட்டர் பக்கத்தில், ” கருத்துக்கள் இல்லை, தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை பார்க்கவும் ”  என்று நான்கு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

விளக்கம்

2018 ஆம் ஆண்டிற்கான ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்று வருகிறன. அங்கு போட்டிகள் நடைபெறும் பகுதியில் இந்திய வீரர்கள் உணவு அருந்தும் இடத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராதோர் கையில் உணவு தட்டை ஏந்திக் கொண்டு நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு மத்திய அமைச்சர் கோட் உடையில் கையில் உணவு தட்டை ஏந்தி வீரர்களுக்கு பரிமாறி உள்ளார் என்று சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி ஊடக இணைய பக்கங்களிலும் வேகமாக பரவி உள்ளன.

2004-ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் ராஜ்யவர்தன் சிங் ராதோர். ஆகையால் தான், விளையாட்டு வீரர்களுக்கு உணவு பரிமாறி கெளரவிக்கிறார் என்ற கருத்துக்களுடன் இந்த படங்கள் பதிவிடப்பட்டன.

உண்மையில், ராஜ்யவர்தன் சிங் ராதோர் கையில் உணவு தட்டுடன் இருக்கும் படங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவையே…!!!  

ராஜ்யவர்தன் சிங் ராதோரின் படத்தை ட்விட்டரில் பதிவிட்ட பத்திரிகையாளர் மற்றும் 2008 ஒலிம்பிக் போட்டி வழிகாட்டியான திக்விஜய் சிங் டோ தன் ட்விட்டர் பக்கத்தில், ” கருத்துக்கள் இல்லை, தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை பார்க்கவும் ”  என்று நான்கு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்திய பத்திரிகையாளர் Rajdeep Sardesai தன் ட்விட்டர் பக்கத்தில், “ மன்னியுங்கள், என்னுடைய தவறு ! விளையாட்டுத்துறை அமைச்சர் ராதோர் நமது வீரர்களுக்கு உணவு பரிமாறவில்லை. ஆனால், விளையாட்டு வீரர்களை சந்திக்கும் இடத்தில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி உள்ளார் “ என்று பதிவிட்டுள்ளார்.

Rajdeep Sardesai-வின் ட்விட்டர் பதிவு மற்றும் திக்விஜய் வெளியிட்ட புகைப்படங்கள் நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துரைக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராதோர் தட்டில் உணவை எடுத்துக் கொண்டு வீரர்களுக்கு அருகில் வரும் பொழுது புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படங்கள் மட்டுமே இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால், அதன்பின்னர் அவர் வீரர்களுடன் பேசியது, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்ட படங்கள் வெளியாகவில்லை. விளையாட்டு அதிகாரிகளுடனும் பயிற்சியாளர்களுடனும் உண்டு அவர்களை இருந்தாலும், அவரின் புகைப்படங்கள் தவறான தகவல்களுடன் இணையத்தை மையம் கொண்டுள்ளது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
Donation pls, என்றவுடன் ஆகா காசு கேட்கிறார்களே என்றெல்லாம் நினைக்க வேண்டாம் . எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை நிதி உதவியாக செய்யலாம். உங்களின் (மக்களின்) பத்திரிகையாக இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா/ உதவியாக தரலாம்.

Donate with

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close