பனை மரம் பூத்திருக்கும் அதிசயம் | உண்மை தானா ?

பரவிய செய்தி

100 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் பனைமரங்கள் இவ்வாறு பூக்கும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்கள் ஒரு குறிப்பில் கூறியுள்ளார். இடம்-முசிறி

 

மதிப்பீடு

விளக்கம்

பனை மரத்தை பற்றி பலரும் அறிந்து இருப்போம். ஆனால், பனை மரம் பூக்குமா ?
அப்படியா என ஆச்சரியத்துடன் கேட்போம். முசிறியில் பனை மரம் பூத்து இருப்பதாக இப்படமானது முகநூலில் பகிரப்பட்டு இருந்தது. இது உண்மையான எனத் தெரிந்து கொள்ள முயன்றோம்.

Advertisement

பனை மரம் பூக்குமா என்றால் ? ஆம், பனை மரம் பூக்கச் செய்யும். 80 ஆண்டுகள் கடந்து வாழும் பனை மரத்தில் கிளைகள் வளராமல் காய்ந்து இருக்கும், அதன் உச்சியில் இருந்து பூக்கத் துவங்கும். அவ்வாறு பனை மரம் பூத்த பிறகு மரமானது இறந்து விடும் என்கிறார்கள். இதனை ” Century Palm ” என்பார்கள்.

இத்தகைய அரிதான நிகழ்வை அனைவரும் பார்த்து இருக்க வாய்ப்பில்லை. அதனை பார்க்கையில், மரத்தின் கிளைகள் முள் முள்ளாய் காட்சி அளிப்பதில் இத்தனை அழகை  பூக்கிறது அதிசயமாய் தான் தோன்றும்.

இதேபோன்று, 2008 ஆம் ஆண்டில் மடகாஸ்கர் பகுதியில் நூற்றாண்டு பனை மரம் பூத்து இருப்பதை கண்டதாக தாவரவியலாளர்கள் கூறியதாக ஓர் இணைய பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். சில தாவரவியல் மாணவர்கள் இதனை கண்டதாக நம்மிடம் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் பனை மரம் பூப்பதை பற்றி முன்பே குறிப்பிட்டதாக கூறுகின்றனர். பனை மரம் பூக்கும் அரிய நிகழ்வை காண நேர்ந்தால் நிச்சயம் அதன் அழகை ரசியுங்கள்.

பனை நம் மண்ணின் பிரதான வளம் என்றே கூறலாம். பனை மரத்தினை காத்து நம் வளத்தை மேம்படுத்தி இதுபோன்ற பல நூற்றாண்டு பனை மரத்தை எதிர்கால சந்ததியினர் கண்டுகளிக்க வழிவகை செய்வோம்.

UPDATE : 

Gokul Dgk என்ற ஃபாலோயர் பனை பூப்பது தொடர்பாக வெளியிட்ட முகநூல் பதிவில், எல்லா பனைகளும் இதுபோல பூக்காது. இதன் பெயர் தாளிப்பனை எனக் கூறி இருந்தார். இதையடுத்து, கூடுதல் தகவலை இணைக்க முற்பட்டோம்.

ஆம், பனை மரம் பூக்கும் என்பது உண்மை என்றாலும், பனை மரத்தின் ஒரு வகை மட்டுமே இப்படி பூக்கின்றன. ” Talipot palm ” எனும் பனை மர வகை மட்டும் பூக்கின்றன. அதன் தாவரவியல் பெயர் ” Corypha Umbraculifers ” . 30 முதல் 80 ஆண்டுகள் ஆகி இருக்கும் ” Talipot palm ” வகை பனை மரங்கள் பூக்கின்றன.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button