Section 49A மற்றும் 49P பற்றி பரவும் வாட்ஸ் ஆஃப் பார்வர்டு உண்மையா ?

பரவிய செய்தி
நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் பொழுது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் உங்களின் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ” Section 49A ” கீழ் ” சேலஞ் ஓட்டை கேட்டு உங்களின் வாக்கினை செலுத்தலாம்.
ஒருவேளை உங்களின் ஓட்டினை வேறு ஒருவர் செலுத்தி விட்டது தெரிய வந்தால் ” டென்டர் ஓட்டு ” பற்றி கேட்கலாம். பின்பு உங்களின் வாக்கினை செலுத்திக் கொள்ள முடியும். இதில், ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் டென்டர் வாக்குகள் 14% சென்றால் மறுத்தேர்தல் நடத்தப்படும்.
மதிப்பீடு
சுருக்கம்
” சேலஞ் ஓட்டு ” மற்றும் ” டென்டர் ஓட்டு ” பற்றி வாட்ஸ் ஆஃப்களில் அதிகம் பகிரப்படும் செய்திகள் ஒரு பகுதி உண்மை, ஒரு பகுதி தவறான தகவலாகும்.
விளக்கம்
வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பொழுது அங்கு தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்றாலும், தங்களின் வாக்கினை வேறொருவர் செலுத்தி விட்டதால் அதற்காக என்ன செய்ய சென்றும், சட்டம் என்னக் கூறுகிறது என்பதை வாட்ஸ் ஆஃப் பார்வர்டு செய்தியில் குறிப்பிட்டு இதனை அதிகம் பகிருமாறு கூறி இருந்தனர்.
ஆனால், பரவிய செய்தியில் ஒரு பாதி செய்தி மட்டுமே உண்மை, மற்றொரு பாதி தவறான தகவலாகும். அதனைப் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
பிரிவு 49A :
பிரிவு 49A பற்றிய வாட்ஸ் ஆஃப் செய்தியில் கூறியது தவறான தகவல். தேர்தல் விதிமுறைகள் 1961-ல் பிரிவு 49A என்பது மின்னணு வாக்கு இயந்திரத்தின் வடிவமைப்பு பற்றியே குறிப்பிடுகிறது, ” சேலஞ் ஓட்டு ” எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும், பிற விதிகளிலும் அதைப் பற்றி குறிப்பிடவில்லை.
பிரிவு 49P :
வாட்ஸ் ஆஃப் செய்தியில் பிரிவு 49P கூறிய தகவலில் பாதி மட்டும் உண்மை. சமீபத்தில் வெளியாகிய ” சர்க்கார் ” திரைப்படத்தில் பிரிவு 49A பற்றிய கதை களம் அமைந்து இருக்கும். தன் வாக்கினை பிறர் செலுத்தியதால் தேர்தல் விதிகள் பிரிவு 49A மூலம் தன் வாக்கினை மீண்டும் பெற்று தேர்தலில் தன் ஓட்டினை செலுத்த முடியும்.
இது தொடர்பான தேர்தல் அதிகாரிகளிடம் முறையாக புகார் தெரிவித்து, தன் அடையாள அட்டையினை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவருக்கு என்று வாக்கு சீட்டு முறையில் ” Tender ballot Vote ” அளிக்கப்பட்டு, அந்த வாக்கு சீட்டு பெட்டியில் அடைத்து சீல் வைத்து எடுத்துச் செல்லப்படும். மேலும், வேட்பாளர்களின் வெற்றிக்கான ஓட்டின் வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த ஓட்டு வெற்றியை நிர்ணயிக்க எண்ணப்படும்.
இந்த விதிகளில், வாட்ஸ் ஆஃப் பார்வர்டுகளில் கூறும் படியாக, 14% சதவீத வாக்குகள் டெண்டர் ஓட்டாக விழுந்தால் மறுத்தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடவில்லை.
மேலும் படிக்க : நோட்டாவுக்கு 35% ஓட்டு விழுந்தால் தேர்தல் வெற்றி செல்லாதா ?
இதே போன்று நோட்டாவிற்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுத்தேர்தல் நடைபெறும் என வதந்தியை பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.