சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !

பரவிய செய்தி
சந்திராயன் 3 நிலவின் மேற்பரப்பு புகைப்படம் எடுத்து அனுப்பிய அருமையான காட்சி…
மதிப்பீடு
விளக்கம்
கடந்த ஜூலை 14 அன்று இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 21 அன்று தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான்-3 மூலம் கடந்த ஆகஸ்ட் 19 அன்று எடுக்கப்பட்ட நிலவின் தொலைதூர புகைப்படங்கள் என்று கூறி நான்கு புகைப்படங்களை வெளியிட்டது.
இந்நிலையில் சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பை எடுத்து அனுப்பிய காட்சிகள் என்று கூறி 20 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
The visuals of the moon from Chandrayaan – 3 are simply Stunning!
Can’t keep Calm, Save the date! Landing on South Pole of the Moon just 3 days away – 23rd Aug 1745pm Indian time.
Also Praying for recovery of Russia’s Luna 25! #Chandrayaan_3 #Luna25 pic.twitter.com/GmCRE51Lqd— Vishal Verma (@VishalVerma_9) August 20, 2023
#Chandrayaan_3 sent the real videos and pictures of moon. Some countries have been fooling the world with fancy videos of moon-landing.
Two templates are ready with haters of Bharat
success:Nehru invented ISRO
failure:That’s what happens when you don’t pay salaries to scientists pic.twitter.com/Ldb474rJvn— Bharat Ki Beti 🇮🇳👧🏻 (@PratibhaPriyad3) August 21, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவின் கீபிரேம்கள் i-Stock இணையதளத்தில் உள்ள புகைப்படத்துடன் பொருந்துவதைக் காண முடிந்தது. மேலும் அதில் தலைப்பு – “ நிலவில் உள்ள மேற்பரப்பின் கடினமான பரப்பை, நெருக்கத்தில் சென்று எடுத்தது. 3D விளக்கம். இந்த புகைப்படம் நாசாவால் வழங்கப்பட்டுள்ளது.” என்றும், பதிவிடப்பட்ட தேதி – டிசம்பர் 03, 2020 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தப்புகைப்படம் நாசாவால் எடுக்கப்பட்டது என்று கூறி கடந்த 2020-லிருந்தே இணையதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
Chandrayaan-3 Mission:
The mission is on schedule.
Systems are undergoing regular checks.
Smooth sailing is continuing.The Mission Operations Complex (MOX) is buzzed with energy & excitement!
The live telecast of the landing operations at MOX/ISTRAC begins at 17:20 Hrs. IST… pic.twitter.com/Ucfg9HAvrY
— ISRO (@isro) August 22, 2023
மேலும் பரவி வரும் வீடியோ குறித்து இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடியதில், ஆகஸ்ட் 22 அன்று நிலவின் புகைப்படங்களை தொகுத்து அவர்கள் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று கிடைத்தது. இது தவிர சமூக ஊடகங்களில் பரவி வருவது போன்று எந்த வீடியோவையும் அவர்கள் வெளியிடவில்லை.
Flash movie என்ற இணையதளத்திலும் சமூக் ஊடகங்களில் பரவி வரும் அதே வீடியோ, “நிலவில் உள்ள மேற்பரப்பின் கடினமான பரப்பை, நெருக்கத்தில் சென்று எடுத்தது. 3D அனிமேஷன். இந்த புகைப்படம் நாசாவால் வழங்கப்பட்டுள்ளது.” என்ற தலைப்புடன் பதிவு செய்யப்பட்டிருந்தது.
Amazing Chandrayaan-3 Mission: Look how Earth looks from the Moon😍#Chandrayaan_3 #Chandrayaan3#Luna25 #Russia #UkraineRussianWar #Luna25Crash
— JKSSB Aspirants (@jkssb_aspirants) August 20, 2023
இதே போன்று சந்திராயன்-3 மூலம் எடுக்கப்பட்ட பூமியின் தோற்றம் என்று கூறி மற்றொரு வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரயான்-3 ஏவப்பட்ட காட்சி எனப் பரவும் SpaceX ராக்கெட் வீடியோ !
இதற்கு முன்பும் சந்திரயான்-3 விண்கலம் குறித்து பல்வேறு போலி செய்திகள் பரவின. அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பை எடுத்து அனுப்பிய காட்சிகள் என்று கூறி பரவி வரும் வீடியோ, உண்மையில் சந்திரயான்-3 விண்கலத்தால் எடுக்கப்பட்டதல்ல. இது நாசாவால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை 3D அனிமேஷன் செய்து உருவாக்கப்பட்ட வீடியோ என்று கூறி கடந்த 2020ல் இருந்தே இணையதளங்களில் வெளியாகி உள்ளது என்பதை அறிய முடிகிறது.