This article is from Jul 29, 2019

சந்திராயன்-2 விண்கலன் பூமியை எடுத்த புகைப்படங்கள் | உண்மை என்ன ?

பரவிய செய்தி

சந்திராயன்-2 விண்கலன் மூலம் முதன் முதலில் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள். அற்புதமான காட்சிகள்.

மதிப்பீடு

விளக்கம்

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளுக்கு பிறகு ஜூலை 22-ம் தேதி சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவினர். இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் அற்புத புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் கொண்ட தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியாவில் இருந்து புறப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் பூமியின் ஒவ்வொரு சுற்றுப்பாதைகளை கடந்தே நிலவின் பரப்பை சென்றையும்.சந்திராயன்-2 விண்கலத்தின் ரோவர் செப்டம்பர் 7-ம் தேதியன்றே நிலவின் பரப்பை அடையும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள் என ஒரு புகைப்பட தொகுப்பே வைரலாகி வருகிறது. மேலும், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ தகவலில் வைரலாகும் புகைப்படங்கள் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. வைரலாகும் புகைப்படங்கள் சந்திராயன்-2 மூலம் எடுக்கப்பட்டவையே அல்ல.

எனினும், வைரலாகும் புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டன, அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.

புகைப்படம் 1 :

இந்த புகைப்படமானது, ரஷ்யாவின் குரில் தீவில் உள்ள Sarychev எரிமலையில் இருந்து புகை,நீராவி, சாம்பல் பீச்சிடும் பொழுது சர்வதேச விண்வெளி மையத்தில்(ISS) இருந்து விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

புகைப்படம் 2 :

மேகங்கள் சூழ்ந்தது போன்று இருக்கும் இப்படமானது Shutterstock-ல் ” flight over the morning Earth” என்ற தலைப்பில் வெளியான அனிமேஷன் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படமாகும்.

புகைப்படம் 3 :

இந்த புகைப்படம் 2014-ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி பல பக்கங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

புகைப்படம் 4 :

இப்படத்தின் முழு புகைப்படமும் 2005-ல் flickr என்ற தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், புகைப்படத்திற்கான கிரெடிட்ஸ்-ஐ NASA/Goddard Space Flight Center Scientific Visualization Studio-க்கு அளிப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். இப்படமானது 2005 செப்டம்பர் 21-ம் தேதி எடுக்கப்பட்டது.

இப்படி ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளன. சில படங்கள் உண்மையில் பூமியின் படங்களாகவும், சில படங்கள் கற்பனையாக வடிவமைக்கப்பட்ட படங்களாகவும் இருக்கின்றன.

விண்வெளியில் பூமி எப்படி இருக்கும் என தோற்றமளிக்கும் ஏராளமான புகைப்படங்கள் இணையத்தில் குவிந்து கிடைக்கின்றன. அவைகளை இணைத்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி உள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader